அடக்கமுடைமை
அறத்துப்பால்
அதிகாரம்(13)
அறம்: இல்லறவியல்
1.அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை
ஆரிருள் உய்ந்து
விடும்.
விளக்கம்: அடக்கம் ஒருவனை உயர்ந்த இடத்தில் வைக்கும்.அடக்கம்இல்லாதவனை இருள் கொண்ட
வாழ்க்கை சூழ்ந்து விடும்.
2.காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை
உயிர்க்கு.
விளக்கம்: அடக்கத்தை ஒரு செல்வமாக
மதித்துக் காக்க வேண்டும்.அடக்கத்தை உயிரினும் மேலாக கருதுவர்.
3.செறிவறிந்து சீர்மை பயக்கும்
அறிவறிந்
தாற்றி னடங்கப்
பெறின்.
விளக்கம்: அறிய வேண்டியவற்றை அறிந்து
நடப்பதே அறிவுடைமை ஆகும்.அவ்வாறு நடந்தால் பாராட்டும்,புகழும் கிடைக்கும்.
4.நிலையிற் றிரியாது தடங்கியான் றோற்றம்
மலையினும் மாணப்
பெரிது.
விளக்கம்: ஐம்புலன்களை தன்
நிலையிலிருந்து மாறுபடாமல் அடக்கி வாழ்பவனுடைய உயர்வு மலையை விடப் பெரியதாகும்.
5.எல்லார்க்கும் நன்றாம் பணிதல்
அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந்
தகைத்து.
விளக்கம்: ஒருவன் எல்லாரையும்
பணிந்து நடந்தால் அது அவனுக்கு நன்மை பயக்கும்.செல்வத்தை விட மிகப் பெரிய செல்வமாக
கருதப்படும்.
6.ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப்
புடைத்து.
விளக்கம்: ஒரு பிறவியில் ஆமையைப்
போல ஐம்பொறிகளையும் அடக்கி வாழ்ந்தால்,அது அவனுக்கு மறு பிறவியிலும் நல்ல பயன்
தரும்.
7.யாகாவா ராயினும் நாகாக்க
காவாக்கால்
சோகாப்பர்
சொல்லிழுக்குப் பட்டு.
விளக்கம்: ஒருவன் தன் நாவை அடக்கி
காக்க வேண்டும்.அவ்வாறு காக்க விட்டால் சொற்குற்றம் ஏற்பட்டு துன்புறுவர்.
8.ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய
னுண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
விளக்கம்: ஒருவன் தீய சொற்களால் பிறரை
துன்பப் படுத்தினால்,அது அவனுக்கு வரும் நன்மையும் தீமையாக முடியும்.
9.தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்
ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
விளக்கம்: தீயினால் சுட்டபுண்
உடம்பில் ஆறி விடும்.ஆனால் நாவினால் பேசுவது மனத்தில் ஆறாத வடுவாக இருக்கும்.
10.கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும்
ஆற்றின் நுழைந்து.
விளக்கம்: யாரிடமும் கோபம்
கொள்ளாது அடக்கம் உடையவனாக வாழ்ந்தால்,அறக்கடவுள் காலம் பார்த்துக்
காத்திருப்பார்.
No comments:
Post a Comment