காலமறிதல்
(செயலை நிறைவேற்றுவதற்கு ஏற்ற காலத்தை அறிதல்)
பொருட்பால்
அதிகாரம்(49)
அறம்-அரசியல்
1.பகல்வெல்லும் கூகையைக்
காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
விளக்கம்: காகம் தன்னை விட வலிமையான கோட்டானை பகலில்
வெல்லும்.அதுபோல பகைவரை வெல்ல அரசன் காலம் அறிந்து செயல்பட வேண்டும்.
2.பருவத்தோ டொட்ட ஒழுகல்
திருவினைத்
தீராமை யார்க்குங் கயிறு.
விளக்கம்: ஒரு செயலை அறிந்து செய்வதால் செல்வத்தை தம்மை
விட்டு நீங்காமல் கட்டி வைக்கும் கயிறாக காலம் உதவுகிறது.
3.அருவினை என்ப
உளவோ கருவியாற்
காலம் அறிந்து செயின்.
விளக்கம்: ஒரு செயலை தொடங்க அதற்கான காலமும் கருவியையும்
அறிந்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
4.ஞாலம் கருதினுங்
கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.
விளக்கம்: காலத்திற்காகக் காத்திருந்து இடம் அறிந்து
செயல்பட்டால் இவ்வுலகத்தையே வெல்ல முடியும்.
5.காலம் கருதி
இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
விளக்கம்: இவ்வுலகத்தை ஆள நினைப்பவர் அதற்கான காலம் வரும்
வரை காத்திருப்பர்.
6.ஊக்கம் உடையான்
ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
விளக்கம்: ஊக்கம் உடையவன் காலத்தை எதிர்பார்த்து பொறுமையாக
இருப்பது,ஆடு தன் எதிரியை தாக்க பின்வாங்கி சென்று தாங்குவது போல தாங்கி வெற்றி
பெறுவான் என்பதே.
7.பொள்ளேன ஆங்கே
புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
விளக்கம்: அறிவுடையவர் தன் பகைவர் தீங்கு செய்தால் உடனே கோபம் கொள்ளாமல் அதை மனதில் வைத்துக் கொண்டு
தக்க காலம் வரும் வரை காத்திருப்பர்.
8.செறுநரைக் காணின்
சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
விளக்கம்: தமக்கு தீங்கு செய்தவரை பார்க்கும்போது பணிவாக
நடந்து கொள்ள வேண்டும்.அவர்களுக்கு முடிவுகாலம் வரும் போது கெட்டு அழிவார்கள்.
9.எய்தற் கரிய
தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
விளக்கம்: செய்தற்கரிய செயலை செய்ய அரிய வாய்ப்பு
கிடைக்கும் போதே செய்து முடித்தல் வேண்டும்.
10. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த
இடத்து.
விளக்கம்: கொக்கு இரைக்கு
காத்திருத்து இரை வந்ததும் விரைந்து செயல்படுவது போல நாமும் காத்திருந்து செயல்பட
வேண்டும்.
No comments:
Post a Comment