அறநூல்கள்
நாலடியார்
“ நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும்
செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு.”
ஆசிரியர்-
சமணதுறவிகள்
பாடல்-400
பொருள்-அறம்
சமயம்-சமணம்
பாடல் விளக்கம்:
நாயின் கால் விரல்கள் நெருங்கி
இருப்பது போல தம்மோடு நெருங்கி இருக்கும் நபர்கள் தமக்கு சிறு உதவி கூட செய்ய
மாட்டார்கள்.அவர்களின் நட்பில் எந்த பயனும் இல்லை.
வயலுக்கு தொலைவிலிருந்து நீரை கொண்டு வரும்
வாய்கால் போல நமக்கு உதவுபவர்களின் நட்பை நாம் தேடி கொள்ள வேண்டும்.
நூற்குறிப்பு:
நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களில் ஒன்று. 400 பாடல்களை கொண்டது.நாலடி
நானூறு,குட்டி திருக்குறள் என்றும் சிறப்பு பெயர்கள் உண்டு.இந்நூலை சமண முனிவர்
பாடியுள்ளார்.
No comments:
Post a Comment