பழமொழி நானூறு
(கல்வியின் சிறப்பு)
“ஆற்றவும் கற்றார்
அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத
நாடில்லை அந்நாடு
வேற்றுநாடு ஆகா தமவேயாம்
ஆயினால்
ஆற்றுணா வேண்டுவது இல்.”
ஆசிரியர்-மூன்றுறை அரையனார்
சமயம்-சமணம்
பாடல்-400
காலம்-கி.பி.8ம் நூற்றாண்டு
பாடல் விளக்கம்:
கற்க வேண்டிய நூல்களை எல்லாம் முழுமையாக கற்று அறிந்தவர்கள்
அறிவுடையவர்கள். அவர்கள் புகழ் எல்லா இடத்திலும் பரவும்.அவர்கள் எங்கு சென்றாலும்
உணவு எடுத்துச் செல்ல தேவை இல்லை.
நூற்குறிப்பு:
பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களுள் ஒன்று.இதனை முன்றுறை அரையனார் இயற்றியுள்ளார்.முன்றுறை என்பது
ஊர்ப்பெயர்.அரையன் என்பது அரசன் என்று பொருள். இந்நூலில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு
பழமொழிகளை கொண்டுள்ளது. இப்பாடலில் ‘ஆற்றுணா
வேண்டுவது இல்’என்ற பழமொழி இடம்
பெற்றுள்ளது.அதற்கு ’கற்றவனுக்கு கட்டுச்சோறு
வேண்டா’ என்று பொருள்.இதற்கு முதுமொழி,உலக வசனம் என்று வேறு
பெயர்கள் உண்டு.பழமொழியை தொல்காப்பியர் முதுசொல் என்று கூறுகின்றார்.
No comments:
Post a Comment