Sunday

TNPSC Tamil study material part-B Thirukkural


                 பொருள் செயல்வகை

     (பொருளை ஆக்குவதற்கும் காப்பதற்குமான செயல்முறைகள்)

                          பொருட்பால்

                          அதிகாரம்(76) 
  
                  பொருள்-கூழியல்

1.பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.
விளக்கம்: எந்த தகுதியும் இல்லாதவரை மதிக்க செய்வது பொருள் என்னும் செல்வமாகும்.

2.இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
விளக்கம்: செல்வம் இல்லாதவரை உலகம் இகழும்,செல்வம் உடையவரை புகழ்ந்து பேசும்.

3.பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கு
எண்ணிய தேயத்துச் சென்று.
விளக்கம்: செல்வம் என்பது அணையா விளக்கு அது எந்த இடத்திற்கு சென்றாலும் பகைமை என்னும் இருளை போக்கும்.

4.அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
விளக்கம்: பிறருக்கு தீங்கு செய்யாமல் நல்ல வழியில் சேர்த்த செல்வம் அறத்தினையும்,இன்பத்தினையும் தரும்.

5.அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
விளக்கம்: தவறான வழியில் வந்த செல்வத்தை அனுபவிக்காமல் அழிய விட வேண்டும்.

6.உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
விளக்கம்: மக்கள் வரி பொருளும்,அரசுரிமையால் வந்த பொருளும்,பகைவரை வென்று கொண்ட பொருளும் அரசனுக்குரிய பொருள் ஆகும்.

7.அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ்
செல்வச் செவிலியால் உண்டு.
விளக்கம்: அன்பு என்னும் தாய் ஈற்ற அருள் என்னும் குழந்தை,பொருள் என்னும் வளர்ப்புத்தாயால் வளர்க்கப்படும்.

8.குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.
விளக்கம்: தன் கையில் பொருளை வைத்து கொண்டு ஒரு செயலை செய்வது,மலையின் மேல் ஏறி யானைப் போரை பார்ப்பது போன்றதாகும்.

9.செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
விளக்கம்: எதிரியை அழிக்கும் கூர்மையான கருவி செல்வமாகும்.அச்செல்வத்தை தேடி சேர்க்க வேண்டும்.

10.ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்
ஏனை யிரண்டும் ஒருங்கு.
விளக்கம்: நல்ல வழியில் பொருளை சேர்ந்தவருக்கு அறமும் இன்பமும் ஒரு சேர எளிதாகக் கிடைக்கும்.

No comments:

Post a Comment

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....