Thursday

TET Study Materials in Tamil - Educational Thoughts of Rabindra Nath Tagore

 

  இரபீந்திரநாத் தாகூரின்

                கல்விச்சிந்தனைகள்:

தாகூரின் வாழ்க்கைக் குறிப்பு

v  1861ம் ஆண்டு மே திங்கள்  6ஆம் நாள் கல்கத்தாவில் உள்ள ஒரு செல்வக் குடும்பத்தில் மகரிஷிதேவேந்திரநாத் தாகூரின் 14வது பிள்ளையாக பிறந்தார்.

v  தாகூர் கல்வியின் மீது அதிக அன்பு கொண்டவர்.தமது கல்விக் கொள்கைகளுக்கு உண்மை வடிவம் கொடுக்க 191 ல் சாந்திநிகேதன் என்னும் புதுமைப் பள்ளியைத் தொடங்கினர்.

v  1921 ல் இதுவிஸ்வ பாரதிஎன்ற உலகப் பல்கலைக் கழகமாக உயர்ந்தது.

v  1913 ல்கீதாஞ்சலிஎன்ற கவிதை தொகுப்புக்கு நோபல்பரிசு பெற்று மிகப்பெரிய கவிஞர் ஆனர்.

v  குருதேவர்என்று போற்றப்பட்ட தாகூர் சிறந்த கல்வி அறிஞர் ஆனர்.

v  நாட்டுப்பற்றுமிக்க இவர் 1915 ல் ஆங்கில அரசால் வழங்கப்பட்டநைட்விருதை ஜாலியன்வாலாபாக் படுகொலையைக் கண்டித்து 1919 ல் திருப்பி அளித்தார்.

v  தாகூர் ஒரு நவீன இந்திய துறவி.

v  வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றில் அழ்ந்த பற்று கொண்டவர்.

v  பண்டைய ரிஷிகள் போல் துறவு வாழ்வு மேற்கொண்டார்.

v  ரூஸோவைப் போன்று இயற்கையை நேசித்தார்.

v  கலைஞராக மலர்ந்து கல்வியாளராக மாறிய இவர் 1941 ம் ஆண்டு ஆகஸ்டு 7ம் நாள் இயற்கை எய்தினார்.

 

தாகூரின் கல்வி சிந்தனைகள்

  

Ø  சுதந்திரம்

Ø  படைப்பாற்றல் மிக்க சுயவெளியீடு

Ø  இயற்கையுடனும், மனிதனுடனும் உள்ள நல்லுறவு

Ø  உலக சகோதரத்துவம்               

 

தாகூரின் கல்வி நோக்கங்கள்

 

Ø  உடல் வளர்ச்சி

Ø  அறிவு வளர்ச்சி

Ø  ஒழுக்க – ஆன்மிக வளர்ச்சி

Ø  சமூக வளர்ச்சி

 

கல்வி ஏற்பாடு

 

Ø  மாணாக்கர் அனைத்து பாடங்களையும் கற்று இருக்க வேண்டும்.

Ø  வரலாறு பாடத்தை அனைவரும் கற்று கொள்ள வேண்டும்.

Ø  உயர் கல்வியில் அறிவியல் முக்கிய பங்கு பெற வேண்டும்.

Ø  தாய்மொழியிலே துவக்கக்கல்வி அமைய வேண்டும்.

Ø  பிற பாடங்களான மொழி, இலக்கியம், புவியியல், இயற்கை அறிவியல், இசை, நுண்கலைகள் போன்றவற்றை கற்று கொள்ள வேண்டும்.

Ø  நாட்டியம், நாடகம், ஓவியம், வண்ணம் தீட்டுதல், தோட்டவேலை போன்றவற்றிற்கு முக்கிய பங்கு அளிக்க வேண்டும்.

Ø  மாணவர்களின் தனித் திறமைகளை அறிந்து அவற்றை வளர்க்க உதவி செய்ய வேண்டும்.

Ø  அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வியை அளிக்க வேண்டும் என தாகூர் கூறுகின்றார்.

 

        

 

    

 

 

 

 

No comments:

Post a Comment

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....