Saturday

TET Study Materials - Part (A) Child Development (Paper 1) Unit 2

 

Teachers Eligibility Test - Paper 1

 

(i) Child Development and Pedagogy

 

(Relevant to Age Group 6 - 11)

 

Part (A): Child Development

 

 Unit-II: The Children’s Profile at the Beginning of Primary Education—Social and Emotional.

 

Erickson’s Psycho-social development Emotional development

 

சமூக வளர்ச்சி (Social Development)

 

v  குழந்தை பிறந்து வளர்ந்த பிறகு தனது சமூகத்தை பார்த்து அவற்றில் நடக்கும் சட்ட திட்டங்களை மதித்து நடக்கும் பண்பைக் கற்றுக் கொள்ளுகின்றது.

 

v  இது இரு பண்புகளை கொண்டுள்ளது. அவை,

     

                                                                                            I.            சமூக உணர்வு பெற்றுத் திகழ்தல்.

                                                                                         II.            சமூகச் செயல்களில் பொறுப்புடன் பங்கேற்றல்.

Ø  ஹர்லாக் என்பவராது கருத்துப்படி சமூக வளர்ச்சி என்பது சமூகத் தொடர்புகளில் முதிர்ச்சி பெறுதல் ஆகும்.

 

Ø  தான் வாழும் சமுகத்தின் பழக்க வழக்கங்கள், நல்லொழுக்கம், பண்பாட்டு கூறுகள் ஆகியவற்றைக் கற்று தனதாக்கிக் கொள்ளுதல் ஆகும்.

 

Ø  ‘தான்’ என்ற உணர்வைத் தாண்டி ‘நாம்’ என்ற உணர்வோடு இயங்குதல், பிறருக்கு ஒத்துழைப்பு அளித்தல், விட்டுக் கொடுத்தல், சகித்துக் கொள்ளுதல் போன்ற பண்புகளைப் கற்றுக் கொள்ளுகின்றனர்.

 

Ø  தனது ஆர்வங்கள், தெளிவுகள் ஆகியவற்றை பெருக்கிக் கொள்வதும் சமூக வளர்ச்சியில் அடங்கும்.

 

Ø  குழந்தைகளிடம் சமூகவியல்பு வளர்ச்சியை ஏற்படுத்துதலையே ‘சமூக நெறிப்படுத்தும் செயல்முறை’ என்பர்.

 

மனவெழுச்சி வளர்ச்சி (Emotional Development)

 

Ø  குழந்தை பிறப்பின்போது இருக்கும் பொது மனவெழுச்சியான ‘’பொதுவான பரபரப்பிலிருந்து’’ படிப்படியாக வளர்ச்சி அடைகிறது.

 

Ø  இந்த வளர்ச்சி மூலம் பயம், கோபம், மகிழ்ச்சி, துக்கம், அன்பு, கருணை, அருவருப்பு போன்ற பல்வேறு மனவெழுச்சிகள் அமைய பெறுகின்றன.

 

Ø  இவற்றைபொருத்தமான நேரத்தில் பொருத்தமான வகையில் வெளிப்படுத்தக் கற்று உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருக்கும் மனவெழுச்சி முதிர்ச்சிநிலையை அடைதலே மனவெழுச்சி வளர்ச்சி ஆகும்.

 

முன் தொடக்கப்பள்ளி (Primary Education)

 

Ø  பிறப்பு முதல் ஐந்து வயது வரையுள்ள வளர்ச்சியை குழவிப்பருவம் என்கிறோம்.

 

Ø  இந்த பருவத்தை மிகவும் முக்கியமான பருவம் எனவும் பிற பருவ வளர்ச்சிக்கு அடிப்படையானதாகவும் குறிப்பிடுக்கின்றனர்.

 

Ø  கல்வியின் முதல் படியான மழலையர் கல்வி இந்த பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.

 

Ø  இந்த பருவத்தில் குழந்தைகள் தனது தேவைகளுக்கு பெற்றோர்களை சார்ந்து வாழும் நிலையிலிருந்து தனது தேவைகளை தானே செய்து கொள்ளும் சுயசார்பு நிலையை நோக்கி முன்னேறுகின்றனர்.

 

குழவிப் பருவத்தின் பண்புகள்

 

Ø  தீவிர உடல்வளர்ச்சி

Ø  அடிப்படை மனத்திறன்கள் மலர்தல்

Ø  செய்திறன்களைப் பெறுதல்

Ø  மனவெழுச்சித் தொடர்புடைய சில துலங்கல்களையும் சிறிது சமூக நடத்தையையும் பெறுதல்.

Ø  மொழித்திறன் வளர்ச்சி

 

v  மூன்று முதல் ஐந்து வரை உள்ள நிலையை முன்தொடக்கக் கல்விநிலை என்று அழைக்கப்படுகிறது.

 

v  குழந்தைகளின் இயல்புகளையும் தேவைகளையும் கவனத்தில்கொண்டு மழலைப் பள்ளியின் செயல்திட்டங்களை அமைத்திடல் வேண்டும்.

 

v  குழந்தைகளின் குடும்பங்களில் காணப்படக் கூடிய உடல் உளத் திறன்களின் குறையை கருத்தில் கொண்டு மழலைப் பள்ளியை இயங்க வேண்டும்.

 

v  இப்பருவ குழந்தைகள் உடலியக்க செயல்களில் மிகுத்த தன்னம்பிக்கையோடு செயற்படுவதும் துடிப்புடனும் இருப்பார்கள்.

 

v  விளையாட்டு இவர்களின் பொழுதுபோக்கு ஆகும்.விளையாட்டின் மூலமாகவே கற்றல் வளர்ச்சி அடைகிறது.விளையாட்டில் உடற்செயல்கள் மட்டுமின்றி மனச்செயல்களும் இடம் பெறுகின்றன.

 

v  தானே உணவு உண்ணல்,உடை அணித்தல் போன்ற செயல்கள் வளர்ச்சி பெற தொடங்குகின்றது.

 

v  கண்,கைகள் செயற்பாடுகள் முழுவளர்ச்சி பெறாமல் இருக்கும்.ஐந்து வயது முடியும்முன் கைப்பழக்கம் நிலைப்பெறுகிறது.பெரும்பாலான குழந்தைகள் வலக்கை பழக்கம் உடையவர்களாக இருப்பர்.

 

v  இந்த பருவத்தில் உள்ள இருபால் குழந்தைகள் இடையே வேறுபாடுகள் பற்றி ஓரளவு அறிந்து கொள்ள தொடங்குவர்.

 

v  இப்பருவத்தில் உள்ள குழந்தைகள் தங்கள் மனவெழுச்சியை எவ்வித கட்டுபாடும் இன்றி வெளிப்படுத்துவர்.

 

v  தங்கள் கோவத்தை அழுகை மூலமும் சினம் கொண்டவரிடம் அவர் சொல்லுக்கு கீழ்ப்படியாமல் இருத்தல் மூலமும் தங்கள் மனவெழுச்சியை வெளிப்படுத்துவர்.

 

v  மொழித்திறன்கள்,கட்டூக்கம் எல்லாவற்றையும் பற்றி கேள்வி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல்,கற்பனை,கண்டுணர்தல் போன்றவை இப்பருவத்தில் வெகுவாகக் காணப்படும்.

 

v  ஆசிரியர்களும் பெற்றோர்களும் முன் தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு சுதந்திரம், மகிழ்ச்சி, அன்பு, பரிவு,விளையாட்டுக்கான வாய்ப்புகள் மிகுந்த சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவ முடியும்.

 

v  இப்பள்ளிகளில் உடல்நலம்,நல்லொழுக்கப் பயிற்சி, குடிமை சமூகப் பண்புகள்,சமூகவியல்பு பெறுதல், கலை,அழகு ஆகிய திறன்களை சிறு குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்.

 

v  இங்கு புத்தகப் படிப்பு அல்லது ஆசிரியர் கற்பித்தல் எதுவும் நடைபெறாது.குழந்தைகள் விளையாடுதலே நடைபெறும்.

 

v  ஆடல்,பாடல்,இசைத்தல்,ஆசிரியர் கூறும் சொற்களை திருப்பிச் சொல்லுதல்,செயல்கள் மூலம் கற்றுக் கொள்ளுதல்ஆகியவை இப்பள்ளிகளில் காணப்படும் செயல்களாகும்.

 

v  இப்பள்ளிகளில் சேர்ந்து பயிலும் குழந்தைகள் உடல் வலிவும்,நல்ல உடற்பழக்கங்களும் பெறுகிறார்கள்.

 

v  பல குழந்தைகளுடன் சேர்ந்து பழகுவதால் சமூக வளர்ச்சி பெறுகிறார்கள்.

 

v  இப்பள்ளிகளில் மிகுதியான புலனியக்க செயல்களும் இடையிடையே ஓய்வும் அளிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....