Tuesday

TET Study Materials - Part (A) Child Development (Paper 1) Unit 3

 

Teachers Eligibility Test - Paper 1

 

(i) Child Development and Pedagogy

 

(Relevant to Age Group 6 - 11)

 

Part (A): Child Development

 

 Unit-III: Physical & Intellectual Development during Primary School Years (6 to 10 Years)

 

Physical growth

 

v  ஆறு முதல் பத்து வயது வரை உள்ள இப்பருவம் பிள்ளை பருவத்திலிருந்து வளர்ச்சி பெறுகிறது.

 

v  பிள்ளை பருவத்தை ‘போலி முதிர்ச்சி நிலை’ என்று அழைப்பர்.

 

v  இப்பருவத்தில் உடல் வளர்ச்சியிலும் மன வளர்ச்சியிலும் ஒரு நிலைத்த தன்மை காணப்படுகிறது.

 

v  இப்பருவத்தில் உடல் வளர்ச்சியின் வேகம் சிறிது குறைவாகக் காணப்படுகிறது.

 

v  கை,கண்கள் வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் காணப்படுகிறது.

 

v  எழுதல்,படம் வரைதல் போன்ற திறன்களைக் கற்க இப்பருவத்தினர் ஆயத்தமாக இருப்பர்.

 

v  இப்பருவத்தின் முக்கிய பண்பாக இருப்பது உடல் மற்றும் உளத்திறன்கள் மிகுந்து காணப்படுவது ஆகும்.

 

v  இவர்கள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு கொண்டிருப்பர்.எதை பற்றியாவது அறிய ஆவல் மிகுந்து காணப்படுவர்.

 

v  இதனால் இப்பருவத்தினரை ‘’உயிருள்ள கேள்வி குறிகள்’’ என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

v  இவர்களுக்கு ஆர்வமும் கட்டூக்கமும் அதிகமாக காணப்படும்.அவற்றை செயல்களில் கண்ட நினைப்பர்.

 

v  பலவற்றை பற்றி அறியவும்,கருவிகளின் துணைக் கொண்டு வேலை செய்யவும் விருப்பம் கொள்வர்.

 

v  நல்ல புத்தகங்களை படிப்பதிலும் பல புதிய பொருட்களை கொண்ட புத்தகங்களையும் படிப்பதிலும் இப்பருவத்தினர் ஆர்வம் கொண்டு இருப்பர்.

 

v  ஆதனால் பள்ளி நூலகத்தில் இந்த வகைப் புத்தகங்களும் தாய் மொழியில் அதிகமாக இருத்தல் அவசியம் ஆகும்.

 

v  கைவேலை,தோட்ட வேலை போன்றவற்றை இப்பருவத்தினர் விரும்பி செய்வர்.

 

v  அறிவு வளர்ச்சி,கைத்திறன் வளர்ச்சி ஆகிய இரண்டையும் ஒருங்கே தரக் கூடிய செயல் திட்டமுறை போன்ற செயல்முறைக் கல்வித் திட்டங்கள் உளவியல் அடிப்படையில் மிக பொருத்தமானவையாகும்.

 

v  இப்பருவத்தில் தான் ஒத்த பாலினத்தைச் சேர்ந்த பிள்ளைகளுடன் சேர்ந்து குழுக்கள் அமைத்து குழுவாகவே செயற்பட விரும்புவர்.இப்பருவத்தை ‘’கூட்டாளிக் குழுப்பருவம்’’ என்று கூறுவர்.

 

v  இப்பருவத்தில் சமூகப் பண்புகளைப் பெற  குழுவாழ்க்கை உதவுகிறது.

 

v  இந்த கூட்டாளிக் குழுக்களின் சக்தியையும் செயலாற்றும் ஆர்வத்தையும் பள்ளிகளில் பயன்படுத்த வேண்டும்.

 

v  அதன் வண்ணம் சாரணர் இயக்கம்,குடிமைப் பயிற்சியின் பகுதியான பாடி வாழ்க்கை போன்றவற்றை அமைத்து செயல்படுத்த வேண்டும்.

 

v  இப்பருவத்தினரது அற ஒழுக்க நடத்தையும் பெரும்பாலும் அவரது குழுவின் பிற உறுப்பினர்களின் ஒழுக்கத்தை பின்பற்றி அமையும்.

 

v  இப்பருவத்தில் இவர்கள் பல பொருட்களை தேடிச் சேமிப்பதில் ஆர்வம் காட்டுவர்.

 

v  இந்த ஆர்வத்தை நல்ல வழியில் செலுத்தினால் மாணவர்கள் பயன்பெறுவர்.குடிமைப் பயிற்சியில் இதற்கு வாய்ப்புகள் உள்ளன.

 

v  இப்பருவத்தில் குழந்தைகள் ஒளிவு மறைவின்றி நடந்து கொள்வர்.

 

v  இப்பருவத்தில் வெளி உலகத்தை பற்றி அறிந்து கொள்ள விருப்புவர்.

 

v  விளையாட்டு,நாடகம்,நடித்தல் போன்றவற்றிற்கு வாய்ப்புகள் அளிக்க வேண்டும்.அது இப்பருவத்திலுள்ள பிள்ளைகளுக்கு மிகவும் அவசியமாகும்.

 

v  தம்மை விட பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வர்.அவர்களை பின்பற்றி நடக்கவும் கற்று கொள்வர்.

 

v  பள்ளியில் ஆசிரியர்கள் இந்த மனப்போக்கை மாணவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுத்தலாம்.

 

v  ஆசிரியர்களும் பெற்றோர்களும்  இப்பருவத்தினரை பரிவுடன் நடத்துதல் அவசியமாகும்.

 

இப்பருவத்திலுள்ள உள்ள முக்கியமான வளர்ச்சி செயல்கள்:

 

v  தன்னைப் பற்றிய உண்மையான கருத்தைப் பெறல்.

 

v  சாதாரண விளையாட்டுகளில் பங்குபெற தேவைப்படும் உடல் திறன்களைக் கற்றல்.

 

v  தன்வயதுக் குழந்தைகளோடு ஒத்துழைத்துச் செயல்படக் கற்றல்.

 

v  தனது பாலினத்தோடு தொடர்புடைய சமூக செயல்களைக் கற்றல்.

 

v  படித்தல்,எழுதுதல்,கணிதத்திறன் போன்ற அடிப்படைக் கற்றல் திறன்களைப் பெறுதல்.

 

v  அன்றாட வாழ்க்கையில் பயனுள்ள சமூக அறநெறிகளைக் கற்றல்.

 

v  சுதந்திரமாக செயல்படக் கற்றல்.

 

v  பல்வேறு செயல்களில் ஈடுபட வாய்ப்பு,கவர்ச்சி,ஆக்கத்திறன்,ஆராய்ந்தறிதல்,

கண்டுணர்தல்,விளையாட்டு,குழு வேலைகள் போன்றவை தொடக்கப்பள்ளிக் கல்வியின் முக்கிய பங்காகக் கருதப்படுகிறது.

 

v  இவை பிள்ளைப் பருவத்தினரின் இயல்புகளையும் தேவைகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....