Teachers
Eligibility Test - Paper 1
(i)
Child Development and Pedagogy
(Relevant to Age 6 – 11)
Part (A): Child development
Unit-IV:
Social and Emotional Development during Primary School Years (6 to 10 Years)
Social development (சமூகவியல்பாக்கல்)
v பிறக்கும்
குழந்தை இயல்பாகவே சமூகவியல்புகள் கொண்டு திகழ்வதில்லை.
v குழந்தை தனது
பெற்றோரிடம் இருந்து தொடங்கி பின் குடும்பம், பள்ளி,நண்பர்கள்,ஆசிரியர்கள் மற்றும்
வேறு பலரோடு பழகும்போதும் சமூகத்தை பற்றிக் கற்றுக் கொள்கிறார்கள்.
v இதன் மூலம்சமுதாயத்தின்
மரபுகளையும்,பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும்,வாழ்வியல் முறையையும் கற்று
சமுதாய உறுப்பினர்களாக மாறுகின்றனர்.
v ஒரு சமுதாயத்தில்
வளரும் குழந்தை அங்குள்ள உறுப்பினர்களோடு பல்வேறு சூழ்நிலைகளில் இடைவினைகள் ஆற்றி
அதில் உள்ள பழக்கவழக்கங்கள்,மனப்பான்மைகள்,விழுமங்கள்,நம்பிக்கைகள்,
மரபுகள்,பேசும் மொழி போன்றவற்றை கற்றுக்கொள்ளுவதை சமூகவியல்பாக்கல் என்று கூறுவர்.
சமூகவியல்பாக்கலின் முக்கிய அம்சங்கள்
v சமூகவியல்பாக்கல் என்பது சமூகத்தின் நிகழ்வுகளையும், நடைமுறைகளையும் சமூக உறுப்பினர்களிடம் நிலைப்படுத்த முயல்வதோடு அவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வழிமுறையாகும்.
v அடிப்படை
ஒழுக்கத்தை மனிதர்களிடம் வளர்த்திடுகிறது.
v பள்ளிகள்,கல்லூரிகள்
போன்றவை சமூக நெறிப்படுத்தும் செயல்களை மேற்கொள்கின்றன.இதனை முறைப்படுத்தப்பட்ட
சமூக முகமைகள் என்றழைக்கப்படுகின்றன.
v குழந்தையை சமூக
நெறிப்படுத்துவதில் குடும்பம் முதன்மை பங்கு வகிக்கிறது.ஆனால் இது
முறைப்படுத்தப்படா சமூக முகமையாகும்.
v பல்வேறு சூழல்கள்
மற்றும் நிகழ்வுகள் மூலம் குழந்தை தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடமிருந்து சமூக
நடைமுறைகளை கற்றுக் கொள்ளுகிறது.
சமூகவியல்பினைக் கற்றலின் வழிகள்:
(i)
பிறரைப் பார்த்து அதுபோலச் செய்திடல்.
(ii)
கருத்தேற்றம்: பிறர் கருத்துகளைக் கேட்டு அதன்படி நடத்தல்.
(iii)
அடையாளம்
காணுதல்: சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட
நடத்தைகள்,அங்கீகரிக்கப்படாத நடத்தைகள் என்பவற்றை அடையாளம் காணுதல்.
(iv)
மொழிப்
பயன்பாடு: தனது தாய்மொழியில் பேசுவதும், படிப்பதும்
சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நடத்தைகளை கண்டுணர்ந்து பின்பற்ற உதவுகின்றன.
சமூகவியல்பாக்கலின் வகைகள்
1)
அடிப்படை சமூக
நெறிப்படுத்தல்
2)
இடைநிலை சமூக
நெறிப்படுத்தல்
3)
முதிர்பருவ சமூக
நெறிப்படுத்தல்
4)
எதிர்பார்ப்புடன்
கூடிய சமூக நெறிப்படுத்தல்
5)
மறு-சமூக
நெறிப்படுத்தல்
சமூகவியல்பாக்கலின் செயல்கள்
(i)
சமூக
சட்டத்திட்டங்கள்,பண்பாடு மற்றும் அதன் பல்வேறு அம்சங்கள் ஆகியவற்றை அறியச்
செய்தல்.
(ii)
முழுமையான ஆளுமை
வளர்ச்சிக்கு உதவுதல்.
சமூகவியல்பாக்கும்
முகமைகள்
a)
குடும்பம்
b)
ஒப்பார் குழு
c)
சமயம்
d)
கல்வி நிறுவனங்கள்
e)
தொழில்கள் போன்றவை
ஆகும்.
No comments:
Post a Comment