Teachers
Eligibility Test - Paper 1
(i)
Child Development and Pedagogy
(Relevant to Age 6 – 11)
Part (B): Learning.
Unit-I:
Learning.(கற்றல்)
v கற்றல் என்பது அனைத்து உயிரிகளுக்கும்
பொதுவான ஒன்று.
v ஆனால் மனித கற்றல் என்பது
பிற உயிரிகளின் கற்றலிருந்து மேம்பட்டது.
கற்றல் – பொருள்:
v கற்றல் என்பது ஒருவன் தன் வாழ்வில் அறிவு,பழக்க
வழக்கங்கள்,மனப்பான்மைகள்,செயல்திறன்கள் ஆகியவற்றை படித்தறிவதன் மூலமோ,சுய
அனுபவங்கள் வாயிலாகவோ அல்லது பிறரால் கற்பிக்கப்படுவதாலோ பெறுவதாகும்.
v கற்றல் என்பது பயிற்சி மற்றும் அனுபவங்கள் அடிப்படையில்
ஒருவர் தனது நடத்தைகளில் மாற்றம் ஏற்படுத்திக் கொள்வதைக் குறிக்கிறது.
v கற்றல் என்பது சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்
கொள்ளுதல் என்று பொருள்.
v பல்வேறு தூண்டல்களுக்கு வெவ்வேறு விதமான துலங்கலை
வெளிப்படுத்தும் ஆற்றலைப் பெறுவதே கற்றல் ஆகும்.
கற்றலின் முக்கிய கூறுகள்:
1)
செயல்
: முயற்சியால்
அறிவு,செய்திறன்கள்,மனப்பான்மைகள் போன்றவற்றைப் பெறும் செயல்.
2)
விளைவு
: நடத்தை மாற்றத்தை
விளைவித்தல்.
3)
விளைவின்
தன்மை : கற்றலினால்
விளையும் நடத்தை மாற்றம்,ஓரளவு நிலைத்த தன்மையைப் பெற்றிருத்தல்.
கற்றலின் தன்மைகள்:
(i)
‘கற்றல்’ அனைத்து
உயிரிகளிடமும் காணப்படுவது.
(ii)
‘கற்றல்’
தொடர்ச்சியானது, கருவறை முதல் கல்லறை வரை தொடர்ந்து நிகழ்வது.
(iii)
கற்றலால் நடத்தை
செம்மையுறுகிறது.
(iv)
கற்றல் நோக்கத்தோடு
கூடியது.
(v)
கற்றல் பன்முகம்
கொண்டது.
(vi)
கற்றல்
அனுபவங்களால் விளைவது.
கற்றலில் ஆதிக்கம் செலுத்தும் காரணிகள்:
i.
கற்போரின்தன்மைகள்,ஆற்றல்கள்,தேவைகள்
மற்றும் கற்கும் திறன்.
ii.
கற்கும் சூழல்கள்
iii.
கற்பிக்கும்
ஆசிரியரின் பண்புகள் மற்றும் திறமைகள்
iv.
கற்கும் முறைகள்
v.
கற்றலுக்குக்
கிடைக்கும் வாய்ப்புகள் மற்றும் வசதிகள்
vi.
ஊக்குவித்தல்
கற்றல் தொடர்பான அடிப்படைக் கோட்பாடுகள்:
v கற்றல் என்பது வளர்ச்சியின் ஒரு வடிவம்.
v கற்றல் என்பது சூழ்நிலைக்கு ஏற்றவாறு தகவமைத்துக்
கொள்ளுதல்.
v கற்றல் என்பது அனுபவங்களை ஒழுங்குற அமைத்தல்.
v கற்றல் என்பது நோக்கத்தோடு கூடியது.
v கற்றல் என்பது ஒரு அறிவார்ந்த செயல்.
v கற்றல் என்பது துடிப்புடன் கூடிய பங்கேற்பு.
v கற்றல் என்பது தனிநபர் சார்ந்ததாகவும் சமூகச்சூழல்
கொண்டதாகவும் உள்ளது.
v கற்றல் முழுமைத்தன்மையுடையது.
v கற்றல் உள்ளொளிப் பெறுதலை சார்ந்துள்ளது.
No comments:
Post a Comment