Teachers
Eligibility Test - Paper 1
(i) Child Development and Pedagogy
(Relevant to Age 6 – 11)
Part (A): Child development
Unit-V:
Moral Development during Primary School Years (6 to 10 Years)
Moral development (ஒழுக்க
வளர்ச்சி)
v சமூக நெறிகளை அறிந்து அதன்படி நடப்பதே ஒழுக்க வளர்ச்சி எனப்படும்.
v ஒழுக்க உணர்வைப் பெற்று அதாவது சரி எது,தவறு எது என்று
பிரித்தறியும் திறனைப் பெற்று தனக்கென ஒழுக்கக் கோட்பாட்டை அமைத்துக் கொள்வதையே
ஒழுக்க வளர்ச்சி என்று குறிப்பிடுகிறது.
v அறப்பண்புகளையும் ஒழுக்க மதிப்புகளையும் பள்ளிகளில்
கல்வியின் மூலம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
v இதனை அறிஞர்கள் நான்கு நிலைகளாக கூறுகின்றனர்.
v முதல்நிலை : பட்டறி நிலை
v இரண்டாவது நிலை : ஆதிக்க நிலை அல்லது ஆளப்படு நிலை
v மூன்றாவது நிலை : சமூக நிலை
v நான்காவது நிலை : தனித்த நிலை
முதல்நிலை : பட்டறி நிலை
Ø
இந்நிலையில்
மகிழ்ச்சி,துன்பம் என்ற இரு இலக்குகளால் குழந்தையின் நடத்தை
கட்டுப்படுத்தப்படுகிறது.
Ø
மகிழ்ச்சி தரக் கூடிய
செயல்களை குழந்தைகள் விரும்பி செய்வர்.
Ø
துன்பம் தரக் கூடிய செயல்களை
குழந்தைகள் எதிர்ப்பர்.
இரண்டாவது நிலை : ஆதிக்க நிலை அல்லது ஆளப்படு நிலை
Ø
இந்நிலையில்
குழந்தைகள் தங்களை விட பெரியவர்களான பெற்றோர்கள்,ஆசிரியர்கள் தம் மீது ஆதிக்கம்
செலுத்துவோரின் சொற்படி நடக்கத் தொடங்குவர்.
மூன்றாவது நிலை : சமூக நிலை
Ø
சமூக நடத்தையை பார்த்து
குழந்தை பல விஷயங்களை கற்றுக் கொள்கிறது.
Ø
நம்மில் பலருடைய ஒழுக்க
வளர்ச்சி இந்நிலையில் தான் தேங்கி நிற்கும்.
நான்காவது நிலை : தனித்த நிலை
Ø
இந்நிலையில்
உள்ள நடத்தை அவன் கொண்டுள்ள உயர் ஒழுக்கம் பற்றிய குறிக்கோள்களால்
செயல்படுவதாகும்.
Ø
சமூகமே
வந்து எதிர்த்தாலும் தான் உறுதியாக நம்பும் அறநெறிகளினின்று மாற மாட்டார்கள்.
v நல்லது எது தீயது எது என்ற கருத்து குழந்தைகளின்
முதியவர்களிடம் இருந்து மாறுபட்டவை என்று பியாஜேயும்,
கோல்பர்க் போன்றவர்களின் கூற்று ஆகும்.
v ஒழுக்கம் பற்றிய இயல்பான நோக்கம்,ஒழுக்கம் பற்றிய சார்பு
நோக்கம் ஆகியவற்றைப் பற்றி பியாஜே கூறியுள்ளார்.
v குழந்தைகள் ஒழுக்கம் பற்றிய நோக்கம் உடையவர்கள்.
Media and their influences
on moral development (ஊடகங்களின் மதிப்பு)
v ஊடகங்களில் குழந்தைகளின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது
தொலைக்காட்சி ஆகும்.
v இது குழந்தைகளின் மீது நேர்மறையான மற்றும் எதிர்மறையான
தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது.
v குழந்தையின் மீது தொலைக்காட்சி ஏற்படுத்தும் தாக்கம் அதன்
வளர்ச்சியை பொறுத்து அமைகிறது.
v இப்பருவத்தில் அதிக அளவு தொலைக்காட்சியைப் பார்ப்பதால்
அதில் வரும் பல நிகழ்ச்சிகள் இவர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
v அவற்றுள் சில அவர்களது வளர்ச்சியை மேம்படுத்துவதாக
இருக்கும்.
v அமெரிக்க குழந்தை மருந்துவ சங்கம் கூறுவது என்னவென்றால்,2
வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கக் கூடாது.
v மேலும் குழந்தைகளின் படுக்கை அறை மற்றும் படிக்கும் அறையில்
எந்தவிதமான தகவல் தொடர்பு சாதனமும் இருக்கக்கூடாது என்று கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment