Wednesday

TET Study Materials - Paper 2 Child development Unit 2

 

Teachers Eligibility Test   -   Paper 2

(i) Child Development and  Pedagogy

(Relevant to Age 11– 14)

 Unit II: Human Growth and Development

 

Nurture and Nature

v  மனித வளர்ச்சி நடத்தை ஆகியவற்றை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது இயற்கையா அல்லது பராமரிப்பா என்று அறிஞர்களுக்கு இடையே ஒரு குழப்பம் நிலவி வருகிறது.

 

v  மனித குலத்தை மேம்படுத்த இனமேம்பாட்டினை நம்ப வேண்டுமா அல்லது மனிதனை உருவாக்குவதில் சூழ்நிலையினை சிறப்பாக்குதலை நம்ப வேண்டுமா என்ற கேள்விகள் வெவ்வேறு விடைகளை தருகின்றன.

 

v  சூழ்நிலை ஒருவனது வளர்ச்சி இயல்பின் அடிப்படை மரபுநிலையன்று என்று சிலர் வாதிடுகின்றனர்.

 

v  ஒருவனால் செய்து முடிக்கப்படும் செயல்களை தக்க வாய்ப்புகளும் ஊக்குவிக்கும் சூழ்நிலைகளும் தரப்பட்டால் வேறு எந்த ஒருவனாலும் செய்து முடிக்க இயலும் என்று சூழ்நிலைவாதிகள் கூறுகின்றனர்.

 

v  அனுபவம்,பயிற்சி,கல்வி ஆகியனயாவும் சூழ்நிலையின் செல்வாக்குகளாகும்.

 

v  மரபுநிலையும் சூழ்நிலையும் சேர்ந்தே மனித வளர்ச்சியை தீர்மானிக்கின்றன.

 

v  பிறப்பால் பெற்றிராத எந்த ஆற்றலையும் திறனையும் கல்வியாலோ பயிற்சியாலோ பெற்றிட முடியாது.

 

v  பிறப்பால் பெற்ற திறன்களும் ஆற்றல்களும் முறையான பயிற்சியின்றி இயங்க முடியாது.

 

v  இதனை மக்கைவர், வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும் நிகழ்ச்சியும் மரபு சூழ்நிலை ஆகிய இரண்டும் இணைந்த செயல்பாட்டிலேயே அமைகிறது என்று கூறுகிறார்.

 

Physical Development (உடல் வளர்ச்சி)

v  இப்பருவத்தில் ஆண்களும் பெண்களும் தங்கள் உடல் வளர்ச்சியில் உச்சத்தை அடைகிறார்கள்.

 

v  பெண்களுக்கு உயரம்,எடை அதிகரிப்பதோடு கை,கால்கள் நீளமாகவும்,வலுவுடனும் காணப்படும்.

 

v  ஆண்களுக்கு குரல் உடைந்து கரகரப்பாகிறது.

 

v  பெண்களின் குரலில் இனிமை கூடுகிறது.

 

v  இப்பருவத்தில் துணை நிலை பால் வளர்ச்சி அடைகிறது.

 

v  இந்த நிலையில் இவர்கள் உடல் தோற்றம் பற்றிய கவலை மிகுந்து காணப்படுவர்.

 

v  இதனை ஆசிரியர்கள் நன்கு உணர்ந்து அவர்களிடம் அன்பும் பரிவும் காட்டி அவர்கள் விரும்பிய செயல்களை கூறி கற்பித்தலுக்கு ஊக்கப்படுத்த வேண்டும்.

 

v  இந்த பருவத்தில் இவர்கள் உணவு மீது அதிக ஆர்வம் காட்டுவர்.

 

v  இதனால் இவர்கள் உடலில் சில பிரச்சினைகள் ஏற்படும்.

 

v  குறிப்பாக சரும பிரச்சினைகள் உண்டாகும்.இதனால் இவர்கள் அதிக மனது அளவில் பாதிக்கப்பட்டு மிகுந்த அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தும்.

 

v  இதனால் ஆளுமையின் நேர்வளர்ச்சி பாதிப்புக்கு உள்ளாகின்றன.

Emotional Development (மனவெழுச்சி வளர்ச்சி)

v  அச்சம்,பதற்றம்,அன்பு,கோபம் முதலிய மனவெழுச்சிகள் வெளிப்படக் கூடிய பருவம் இந்த பருவம் ஆகும்.

 

v  ஆனால் இந்த பருவத்தில் மனவெழுச்சி ஒரே நிலையில் இருக்காது.நிலை மாறிக் கொண்டே இருக்கும்.

 

v  மனக்கிளர்ச்சியால் தாக்கப்படுவதால் இப்பருவத்தினர் எப்போதும் அமைதியற்றுக் காணப்படுவர்.

 

v  நுண்ணுணர்வு மிக்கவர்களாகவும்,அடிக்கடி மாறுதல்களுக்கு உட்படும் மனநிலை உடையவராகவும் காணப்படுவர்.

 

v  தற்பெருமை,சுயமரியாதை,தன்னுணர்வு ஆகியவை இப்பருவத்தில் மிகுந்து காணப்படும்.

 

v  ஒப்பார் குழுவிடம் சேர்ந்து இருப்பதால் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் எதிர்த்துப் பேசுவர்.

 

v  இவர்களில் சிலர் பெற்றோர்களின் கட்டுப்பாட்டை முறித்துக் கொள்ளவும் கூடும்.

 

v  பொதுவாக இப்பருவத்தினர் அதிகாரமாக பேசுவதை முற்றிலும் எதிர்ப்பர்.

 

v  இதன் காரணமாக இவர்களை கலகம் விளைவிப்பவர் என்று அவப்பெயரை சுமத்துவர்.

 

v  பள்ளிகளில் பாடச் சுமையும்,தேர்வில் வெற்றி பெறுவதே வலியுறுத்தும் சமூக அமைப்பு முறையும்,ஒழுக்கம் பற்றி பேசுதலும் இப்பருவத்தினருக்கு எதிர்ப்பையும் வன்முறையையும் வெளிப்படுத்தத் தூண்டுகின்றன.

 

v  எதிர்காலம் வாழ்வில் கைக்கொள்ள வேண்டிய தொழில் பற்றியும் அதிகம் சிந்தித்து அச்சம் ஏற்பட்டு கவலையும் கொள்கின்றனர்.

 

Social Development (சமூக நடத்தை வளர்ச்சி)

v  பிள்ளைப் பருவத்தில் தன் நோக்கிலே சிந்தித்து செயல்பட்டு சுயநலம் மிகுந்து காணப்பட்டவன் இப்பருவத்தில் சமூகத் தொடர்புகளையும்,உறவுகளையும் வளர்த்துக் கொண்டு சமூக நெறிமுறைகளுக்கு ஏற்ப வாழத் தொடங்குகின்றான்.

 

v  தன்னை யாவரும் மதித்து நடக்க வேண்டும் என்று விரும்புவர்.

 

v  பெற்றோர்களின் அறிவுரைகளை விட ஒப்பார் குழுவின் நம்பிக்கைகளுக்கும் மதிப்புகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிப்பர்.

 

v  பெற்றோர்கள் தங்களது விருப்பங்களை அவர்கள் மேல் திணிக்க நேர்ந்தால் அவர்கள் அதை மறைமுகமாகவோ அல்லது நேரிடையாகவோ எதிர்க்க துணிவர்.

 

v  பெரும்பாலும் இப்பருவத்தினர் தம்மை பற்றி நினைப்பதற்கும் பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கும் இடையே பெரிய இடைவெளி காணப்படுகிறது.

 

v  இவர்கள் சமூக அங்கீகாரம் பெறவும் சுயமாகச் செயல்படவும் விரும்புவர்.

 

v  இவர்களின் இலட்சியத்திற்காக விடாப்பிடியாக இருப்பர்.

 

v  விஞ்ஞான முன்னேற்றத்தின் அடிப்படையில் மதக் கோட்பாடுகள், கடவுள் போன்றவற்றைப் பற்றி ஆழமாக சிந்திக்கத் தொடங்குவதால் அவற்றின்மீது இவர்களுக்கு ஐயங்கள் எழத் தொடங்குகின்றன.

 

v  இவர்கள் தனக்கென்று அறநெறி ஒழுக்க நெறிகளை ஏற்படுத்திக் கொள்வர்.

No comments:

Post a Comment

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....