Teachers Eligibility Test - Paper 2
Child Development and Pedagogy
(Relevant to Age 11– 14)
UNIT III: Cognitive Development
Piaget’s stages of cognitive
development (பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி கொள்கை)
அறிதிறன்:
v அறிதிறன் என்பது புலன் உறுப்புகள் மூலம் பெறப்படும்
செய்திகளைத் தொகுத்தல்,சுருக்கி அமைத்தல்,விரிவு படுத்தல்,நினைவு கூர்தல் போன்ற
உளச் செயல்களை ஆராய்ந்து அவற்றை பற்றி அறிந்து கொள்ளுதல் அறிதிறன் ஆகும்.
v வெளி உலகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும் உளச்செயல்களே
அறிதிறன் செயல்கள் ஆகும்.
v இவை அனைத்தும் நமது
புலன்காட்சி,கவனம்,சிந்தனை,
ஆராய்ந்தறிதல்,பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல்,நினைவு ஆகிய செயல்களுக்கு
அடிப்படையாக அமைகின்றன.
அறிதிறன் வளர்ச்சி
v சுவிட்ஸர்லாந்து சேர்ந்த ஜீன் பியாஜே என்பவரின்
கருத்துப்படி அறிதிறன் வளர்ச்சி என்பது தொடர்ச்சியானதாக மட்டுமின்றி
வரிசைக்கிரமாகவும் அமைந்த படிநிலைகளைக் கொண்டுள்ளது.
v இவ்வாறு நடக்கும் வளர்ச்சியானது
நான்கு வளர்ச்சி நிலைகளாகவும் அவற்றிற்கு உரிய நடத்தை மாற்றங்களையும் கொண்டதாக
அமைகிறது.
v இவரின் கருத்துப்படி குழந்தை தன்னுடைய அனுபவங்களை ஒருங்கமைத்து இணக்கமான
நடத்தைப் பெற உதவும் கருவியே நுண்ணறிவுவாகும்.
அறிதிறன் வளர்ச்சி
என்னும் செயல்பாடு
அறிதிறன் வளர்ச்சி என்னும்
செயல்பாட்டின் உட்கூறுகள் நான்கு வகைப்படும்.
(i) தன்வயப்படுத்தல்
(ii) பொருத்துதல்
(iii) இணங்குதல்
(iv) ஒருங்கமைத்தல்
அறிதிறன் வளர்ச்சிப்
படிநிலைகள் நான்கு வகைப்படும்.
(i) புலனியக்கநிலை (௦ முதல் 2 வரை)
(ii) செயலுக்கு முற்பட்ட நிலை (2 முதல்
7 வரை)
(iii) பருப்பொருள் நிலை (7 முதல் 11 வரை)
(iv) கருத்தியல் நிலை (11 வயதுக்கு
மேல்)
Bruner’s Theory
v யூரி பிரான் ஃபென்ப்ரென்னர் என்ற அமெரிக்க உளவியலாளர்
சூழியத் தொகுதிகள் அமைப்புக் கொள்கையை உருவாக்கினார்.
v இக்கொள்கையானது குழந்தையின் உள்ளார்ந்த பண்புகளையும் அக்குழந்தை சூழ்ந்துள்ள சுற்றுசூழல் தொகுதிகளும் ஒன்றோடொன்று இடைவினை புரிந்து அக்குழந்தை
வளர்ச்சி மற்றும் மேம்பாடு அடைவதில் எவ்வளவு செல்வாக்கு செலுத்துகின்றன என்பதை
விளக்குகிறது.
குழந்தையின்
வளர்ச்சியில் தாக்கம் ஏற்படுத்தும் நிலைகள்:
v நுண் அமைப்பு
v இயல்பான அல்லது இடைநிலை அமைப்பு
v உடனடிச் சுற்றுச்சூழலுக்கு வெளியே உள்ள சூழல்
v பெரு அமைப்பு
v சுற்றுச்சூழல் அமைப்புகளில் கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள்
No comments:
Post a Comment