அறநூல்கள்
சிறுபஞ்சமூலம்
பூவாது
காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை நாறுவ
வித்துஉள;
மேதைக்கு
உரையாமை செல்லும்
உணர்வு.
பாடல் விளக்கம்:
பூக்காமலே சில மரங்கள்
காய்ப்பதுண்டு. இதைப் போலவே நன்மை,தீமைகளை நன்குணர்ந்தவர்,வயதில் இளையவராக இருந்தாலும், அவர்
மூத்தவரோடு வைத்து
எண்ணத்தக்கவரே ஆவார். பாத்தி
அமைத்து விதைவிதைக்காமலே, தானே முளைத்து வளரும்
விதைகளும் உள்ளன.
அதைப் போலவே மேதையரும் பிறர்
உணர்த்தாமல் எதையும் தாமே உணர்ந்துகொள்வர்.
நூற்குறிப்பு:
சிறுபஞ்சமுலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.இதன் ஆசிரியர் காரியாசன்.இவரும் ஏலாதியை இயற்றிய கணிமேதாவியாரும் ஒன்றாக படித்தவர்கள். இது தொண்ணூற்றேழு பாடல்களை கொண்டது.கண்டங்கத்தரி,சிறுவழுதுதுணை,சிறுமல்லி,பெருமல்லி,
நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகை வேர்களும் உடல் நோயை நீக்கும்.அதுபோல இந்நூலில் உள்ள பாடல்களின் கருத்து மக்களின் மனநோயை போக்கும்.எனவே இதற்கு சிறுபஞ்சமூலம் என பெயர் பெற்றது.
No comments:
Post a Comment