Wednesday

TNPSC Tamil - திருக்குறள் - ஒழுக்கம்

 திருக்குறள்

ஒழுக்கமுடைமை (நல்ல நடத்தை உடையவராதல்) (Source TN Textbook)

அறத்துப்பால்

அதிகாரம்(14)

   அறம்- இல்லறவியல்

 1.ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

விளக்கம்: ஒருவனுக்கு அனைத்துச் சிறப்புகளையும் தருவது ஒழுக்கமே.அவ்வொழுக்கத்தை உயிரினும் மேலானதாகக் கருதிக் காத்துக் கொள்ளவேண்டும்.

 

2.பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை.

விளக்கம்: ஒருவன் ஒழுக்கமாக நடப்பது கடினமானது.ஒழுக்கத்தோடு நடத்தால் அது அவனுக்கு நல்ல துணை தரும்.

 

3.ஒழுக்கம் முடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்.

விளக்கம்: ஒருவன் ஒழுக்கமாக இருந்தால் அது அவனுக்கும்,அவன் குடும்பத்திற்கும் பெருமைத் தரும்.ஒழுக்கம் இல்லாதிருந்தால் உயர்குடியில் பிறந்தாலும் இழிவாகவே பேசப்படுவர்.

 

4.மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

விளக்கம்: ஒருவன் கற்ற கல்வியை மறந்து விட்டால் மீண்டும் கற்று கொள்ள முடியும்.ஆனால் ஒழுக்கத்தை இழந்து நடந்தால் அது அவன் சிறப்பை அழித்து விடும்.

 

5.அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை

ஒழுக்கம் இலான்கண் உயர்வு.

விளக்கம்: பொறாமைக்குணம் உடையவரிடம் வளர்ச்சி இருக்காது.அதுபோல ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இருக்காது.

 

6.ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக் கறிந்து.

விளக்கம்: ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை அறிந்தவர்கள்,அவ்வொழுக்கத்திலிருந்து தன்னை காத்து கொள்வர்.

 

7.ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி.

விளக்கம்: ஒழுக்கம் உடையவர்களை இவ்வுலகம் புகழ்ந்து பராட்டும்.ஒழுக்கம் இல்லாதவர்கள் செய்யது குற்றங்களுக்கு பழியும் பாவமும் அடைவர்.

 

8.நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்.

விளக்கம்: நல்ல ஒழுக்கம் என்பது நன்மையை தரும் விதையாகும்.தீய ஒழுக்கம் என்பது துன்பத்தை விளைவிக்கும்.

 

9.ஒழுக்கம் உடையவர்க் கொல்லாவே தீய

வழுக்கியும் வாயாற் சொலல்.

விளக்கம்: ஒழுக்கம் உடையவர்கள் தம் வாயினால் பிறர்க்கு தீமை தரும் சொற்களை பேச மாட்டார்கள்.

 

10.உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்.

விளக்கம்: ஒழுக்கம் இல்லாதவர்கள் உலகியல் கல்வியை எவ்வளவு கற்றாலும் அறிவில்லாதவராகவே கருதப்படுவர்.

No comments:

Post a Comment

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....