பத்துபாட்டு
– நெடுநல்வாடை
‘வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்
நீடுஇதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலிய பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க
மாமேயல் மறப்ப மந்தி கூரப்
பறவை படிவன வீழக் கறவை
கன்றுகோள் ஒழியக் கடிய வீசிக்
குன்று
குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்.
பாவகை: நேரிசைஆசிரியப்பா
பாடல் விளக்கம்:
தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச்
சூழ்ந்து எழுந்த மேகமானது
உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது. தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர். தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர். அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது. பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கை-களுக்குச் சூடேற்றியபோதிலும் அவர்களது பற்கள் நடுங்கின.
விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின. மரங்களில் தங்கிகயிருந்த பறவைகள் நிலத்தில் வீழந்தன. பசுக்கள் பா லுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. மலையை குளிரச் செய்வது போன்றிருந்தது
அக்குளிர்கால நள்ளிரவு.
No comments:
Post a Comment