அறநூல்கள்
இனியவை நாற்பது
“குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
திருவுந்நீர் வின்றேல் இனிது.”
ஆசிரியர்-பூதஞ்சேந்தனார்
பாடல்-40
பொருள்-அறம்
சமயம்-சைவம்
காலம்-கி.பி.2ம் நூற்றாண்டு
பாடல் விளக்கம்:
குழந்தை நோயில்லாமல் வாழ்வது இனியது,யாருக்கும் பயப்படாமல் பேசும் கல்வி இனியது,பெருமை உடையவரிடம் சேரும் செல்வம் அழியாது நிலைத்து
இருப்பது இனியது.
நூற்குறிப்பு:
இதன் ஆசிரியர் பூதஞ்சேந்தனார்.இது பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களுள் ஒன்று.இனிய நாற்பது கருத்துகளை தருவதால் இனியவை நாற்பது எனப்
பெயர்பெற்றது.இதின் ஒவ்வொரு பாடலிலும் மூன்று அல்லது நான்கு கருத்துகள் இனிமையாக
வெளிப்படுகிறது.
No comments:
Post a Comment