அறநூல்கள்
பழமொழி நானூறு
விருந்தோம்பல்
மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும் பாரி மடமகள் பாண்மகற்கு – நீர்உலையுள் பொன்திறந்து கொண்டு புகாவா நல்கினாள் ஒன்றாகு முன்றிலோ இல்
பாடல் விளக்கம்:
மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர். பாரி மகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர். அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.
இப்பாடலில் இடம் பெற்றுள்ள பழமொழி ஒன்றாகு முன்றிலோ இல் என்பதாகும். ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பது இதன் பொருள்.
நூற்குறிப்பு:
பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.இதனை
முன்றுறை அரையனார் இயற்றியுள்ளார்.முன்றுறை என்பது ஊர்ப்பெயர்.அரையன் என்பது அரசன்
என்று பொருள். இந்நூலில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பழமொழிகளை கொண்டுள்ளது.
இப்பாடலில் ‘ஆற்றுணா வேண்டுவது இல்’என்ற பழமொழி இடம் பெற்றுள்ளது.அதற்கு ’கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டா’ என்று பொருள்.இதற்கு முதுமொழி,உலக வசனம் என்று வேறு பெயர்கள் உண்டு.பழமொழியை தொல்காப்பியர் முதுசொல் என்று
கூறுகின்றார்.
No comments:
Post a Comment