Thursday

TNPSC Tamil - திருக்குறள் - ஊக்கமுடைமை

 

திருக்குறள்

ஊக்கமுடைமை (Source TN Textbook)

அதிகாரம்(60)

 

1) உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதுஇல்லார்

உடையது உடையரோ மற்று.

2) உள்ளம் உடைமை உடைமை பொருள்உடைமை

நில்லாது நீங்கி விடும்.

3) ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத்துஉடை யார்.

4) ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்கம் உடையான் உழை.

5) வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு.

6) உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

7) சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின்

பட்டுப்பாடு ஊன்றும் களிறு.

8) உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

வள்ளியம் என்னும் செருக்கு.

9) பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை

வெரூஉம் புலிதாக் குறின்.

10) உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கைஅஃது இல்லார்

மரம்மக்கள் ஆதலே வேறு.

No comments:

Post a Comment

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....