திருக்குறள்
ஈகை
அதிகாரம்(23)
1) வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்குறியெதிர்ப்பை நீரது உடைத்து.
2) நல்ஆறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்எனினும் ஈதலே நன்று.
3) இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே உள.
4) இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.
5) ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
6) அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
7) பாத்துஊண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
8) ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்துஇழக்கும் வன்க ணவர்
9) இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
10) சாதலின் இன்னாதது இல்லை இனிதுஅதூஉம்
ஈதல் இயையாக் கடை.
No comments:
Post a Comment