அறநூல்கள்
ஏலாதி
“வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு
நுணங்கிநூல் நோக்கி நுழையா இணங்கிய
பால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்
நூல்நோக்கி வாழ்வான் நுனித்து.”
ஆசிரியர்-கணிமேதாவியார்
பாடல்-81
பொருள்-அறம்
சமயம்-சமணம்
காலம்-5ம் நூற்றாண்டு (கடைச்சங்க
காலம்)
பாடல் விளக்கம்:
பிறரை மதித்தும்,நல்ல வழியில் நடப்பதும்,அறிவுடையவர்களின் கருத்துகளை கேட்டும்,சிறந்த நூல்களை படித்தும் அதன் படி நடக்கும் அரசனை எல்லாரும் புகழ்ந்து
வாழ்த்துவர்.
நூற் குறிப்பு:
ஏலாதி பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.இதன் ஆசிரியர் கணிமேதாவியார்.இவர் திணைமாலை
நூற்றைம்பது என்ற நூலையும் இயற்றியுள்ளார்.இவருக்கு கணிமேதையர் என்னும் மற்றொரு
பெயரும் உண்டு.இது எண்பத்தொரு பாடல்களை கொண்டது.ஏலம் என்னும் மருத்துப்பொருளை
முதன்மையாக கொண்டு இலவங்கம்,சிறுநாவற்பூ,சுக்கு,மிளகு,திப்பிலி ஆகிய மருந்துகளால் ஆன பொருளுக்கு ஏலாதி என்று பெயர்.இது உடற்பிணியை
போக்கும்.அதுபோல இந்நூலின் கருத்துகள் கற்போரின் அறியாமையை போக்கும்.இந்நூல்
தமிழருக்கு அருமருந்து போன்றது.
No comments:
Post a Comment