Thursday

TNPSC Tamil - திருக்குறள் - தெரிந்து செயல்வகை

திருக்குறள்

தெரிந்து செயல்வகை (Source TN Textbook)

அதிகாரம்(47)

1. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழந்து செயல்.

2. தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்.

3. ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார்.

4. தெளிவு இலதவனைத் தொடங்கார் இளிவுஎன்னும்

ஏதப்பாடு அஞ்சு பவர்.

5. வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்

பாத்திப் படுப்பதோர் ஆறு.

6. செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்.

7. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எணணுவம் என்பது இழுக்கு.

8. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று

போற்றினும் பொத்துப் படும்.

9. நன்றுஆற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்

பண்பறிந்து ஆற்றாக் கடை.

10. எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு

கொள்ளாத கொள்ளாது உலகு.

  

No comments:

Post a Comment

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....