ஐஞ்சிறுகாப்பியங்கள்
நீலகேசி
1. நோயும் மருந்தும்
தீர்வனவும் தீராத் திறத்தனவும் செய்ம்மருந்தின்
ஊர்வனவும் போலாதும் உவசமத்தின்உய்ப்பனவும்
யார்வினவும் காலும் அவைமூன்று கூற்றவா
நேர்வனவேஆகும் நிழல்இகழும் பூணாய்
பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி
தீர்தற்கு உரிய திரியோக மருந்துஇவை
ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார் பேர்த்த பிணியுள் பிறவார் பெரிதின்பமுற்றே
பாடல் விளக்கம்:
ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த பெண்ணே! நோயின்
தன்மைபற்றி யார்
வினவினாலும் அது
மூன்று வகைப்படும் என அறிவாயாக.
மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒருவகை.
எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை.
அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன
இன்னொரு வகை.
அகற்றுவதற்கு அரியவை
பிறவித்துன்பங்கள் ஆகும். இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. நல்லறிவு,
நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையே அம்மருந்துகள். இவற்றை
ஏற்றோர் பிறவித்துன்பத்திலிருந்து நீங்கி
உயரிய இன்பத்தை அடவர்.
No comments:
Post a Comment