எட்டுத்தொகை - கலித்தொகை
பாடறிந்து ஒழுகுதல்
ஆற்றுதல் என்பது ஒன்று
அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு
எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பு
எனப்படுவது தன்கிளை செறாஅமை
அறிவு
எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்
செறிவு
எனப்படுவது கூறியது மறாஅமை
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ஓடாது உயிர் வௌவல்
பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்
பாடல் விளக்கம்:
இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல். பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல். பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல். அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல். அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல். செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல். நிறை எனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல். நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனைவழங்குதல். பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல். நாம் ஒவ்வொருவரும் இத்தகைய பண்புநலன்களைப் பின்பற்றி வாழவேண்டும்.
No comments:
Post a Comment