Monday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 2 - செய்யுள்

 

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I -  Tamil

6ம் வகுப்பு  

           இயல் 2

செய்யுள்   (Source TN Textbook)

நாலடியார்

 

         நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்

         ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்

         சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்

         வாய்க்கால் அனையார் தொடர்பு.

 

ஆசிரியர்- சமணதுறவிகள்

பாடல்-400

பொருள்-அறம்

சமயம்-சமணம்

 

பாடல் விளக்கம்:

 

   நாயின் கால் விரல்கள் நெருங்கி இருப்பது போல தம்மோடு நெருங்கி இருக்கும் நபர்கள் தமக்கு சிறு உதவி கூட செய்ய மாட்டார்கள்.அவர்களின் நட்பில் எந்த பயனும் இல்லை.

 

     வயலுக்கு தொலைவிலிருந்து நீரை கொண்டு வரும் வாய்கால் போல நமக்கு உதவுபவர்களின் நட்பை நாம் தேடி கொள்ள வேண்டும்.

 

நூற்குறிப்பு:

 

       நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. 400 பாடல்களை கொண்டது.நாலடி நானூறு,குட்டி திருக்குறள் என்றும் சிறப்பு பெயர்கள் உண்டு.இந்நூலை சமண முனிவர் பாடியுள்ளார்.

 

பாரத தேசம்

 

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்

ஆலைகள் வைப்போம்கல்விச் சாலைகள் வைப்போம்

ஓயுதல் செய்யோம்தலை சாயுதல் செய்யோம்

உண்மைகள் சொல்வோம்பல வண்மைகள் செய்வோம்.

 

குடைகள் செய்வோம்உழு படைகள் செய்வோம்

கோணிகள் செய்வோம்இரும் பாணிகள் செய்வோம்

நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்

ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

 

காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்

கலை வளர்ப்போம் கொல்லர் உலைவளர்ப்போம்

ஓவியம் செய்வோம்நல்ல ஊசிகள் செய்வோம்

உலக தொழிலனைத்தும் உவந்து செய்வோம்.

 

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே

தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்

நீதி நெறியினின்று பிறர்க்குதவும்

நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.

 

ஆசிரியர் குறிப்பு:

 

     பாரதியார் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர். ‘பாட்டுக்கொரு புலவன் பாரதி’ என்று கொண்டாடப்பட்டவர். இவர், விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். கனவு காண்பதில் பாரதிக்கு நிகர் பாரதியே. இந்த பாட்டில்தான் என்னென்ன கனவுகள்? அன்று அவை கனவுகள். இன்று அவை நனவாகி உள்ளன. ‘வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம்’ எனத் தொடங்கும் பாடலின் ஒரு பகுதி, நம் பாடத்தில் இடம்பெற்றுள்ளது. இவர் வாழ்ந்த காலம்  11.12.1882 முதல் 11.9.1921 வரை.

 

No comments:

Post a Comment

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....