Monday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 4 - செய்யுள்

 Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

6ம் வகுப்பு  

           இயல் 4

செய்யுள்   (Source TN Textbook)

இசையமுது

 மழையே மழையே வா வா – நல்ல

 வானப் புனலே வா வா – இவ்

 வையத் தமுதே வா வா

 

 தகரப் பந்தல் தணதண வென்ன

 தாழும் கூரை சளசள வென்ன

 நகரப் பெண்கள் செப்புக் குடங்கள்

 நன்றெங் கும்கண கணகண வென்ன     (மழையே மழையே...)

 

 ஏரிகுளங்கள் வழியும்படி, நாடு

 எங்கும் இன்பம் பொழியும்படி, பொடி

 வாரித்தூவும் பூவும் காயும்

 மரமும் தழையும் நனைந்திடும்படி       (மழையே மழையே...)

 

 தழையா வெப்பம் தழைக்கவும் மெய்

 தாங்கா வெப்பம் நீங்கவும்

 உழுவார் எல்லாம் மலைபோல் எருதை

 ஒட்டிப் பொன்னேர் பூட்டவும்            (மழையே மழையே...)

 

ஆசிரியர் குறிப்பு

 

     ‘புரட்சிக்கவிஞர்’ எனவும் ‘பாவேந்தர்’ எனவும் புகழப்படுபவர் பாரதிதாசன். இவர்தம் இயற்பெயர் சுப்புரத்தினம். இவர் பாரதியின் கவிதைமீது கொண்ட காதலால், தம்முடைய பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார். பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, குடும்பவிளக்கு முதலியன இவர்தம் கவிதை நூல்கள். இவர் வாழ்ந்த காலம்  29.04.1891 முதல் 21.04.1964 வரை.

 

பழமொழி நானூறு

 

              (கல்வியின் சிறப்பு)

 

         “ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்

         நாற்றிசையும் செல்லாத நாடில்லை அந்நாடு

        வேற்றுநாடு ஆகா தமவேயாம் ஆயினால்

        ஆற்றுணா வேண்டுவது இல்.

 

 

ஆசிரியர்-மூன்றுறை அரையனார்

சமயம்-சமணம்      

பாடல்-400

காலம்-கி.பி.8ம் நூற்றாண்டு

 

பாடல் விளக்கம்:

 

கற்க வேண்டிய நூல்களை எல்லாம் முழுமையாக கற்று அறிந்தவர்கள் அறிவுடையவர்கள். அவர்கள் புகழ் எல்லா இடத்திலும் பரவும்.அவர்கள் எங்கு சென்றாலும் உணவு எடுத்துச் செல்ல தேவை இல்லை.

 

நூற்குறிப்பு:

 

பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.இதனை முன்றுறை அரையனார் இயற்றியுள்ளார்.முன்றுறை என்பது ஊர்ப்பெயர்.அரையன் என்பது அரசன் என்று பொருள். இந்நூலில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பழமொழிகளை கொண்டுள்ளது. இப்பாடலில் ஆற்றுணா வேண்டுவது இல்என்ற பழமொழி இடம் பெற்றுள்ளது.அதற்கு கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டா என்று பொருள்.இதற்கு முதுமொழி,உலக வசனம் என்று வேறு பெயர்கள் உண்டு.பழமொழியை தொல்காப்பியர் முதுசொல் என்று கூறுகின்றார்.


No comments:

Post a Comment

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....