BLOCK EDUCATIONAL OFFICER
(வட்டாரக் கல்வி அலுவலர்)
Part I
தமிழ்
இலக்கணம்
குற்றியலுகரம்
v குழந்தை, வகுப்பு, பாக்கு ஆகிய மூன்று
சொற்களில் ‘கு’ என்னும் எழுத்தை உச்சரிப்பதில் வேறுபாடு இருப்பதை
காணலாம்.
v ‘கு’ என்னும் எழுத்து சொல்லின் முதலிலும் இடையிலும் வரும்போது முழுமையாக
ஒலிக்கின்றது.
v ஆனால், சொல்லின் இறுதியில் வரும்போது மட்டும் ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை
மாத்திரை அளவாக ஒலிக்கிறது.
v கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது ஒரு மாத்திரை
அளவிலிருந்து அரை மாத்திரை அளவாக ஒலிக்கிறது.
v இவ்வாறு தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம்
ஆகும்.
v குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம்.
v (எ.கா) காசு, எஃகு, பயறு, பாட்டு, பந்து, சால்பு.
முற்றியலுகரம்
v தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு
முழுமையாக ஒலிக்கும்.
v வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாகவே ஒலிக்கும்.
v இவ்வாறு ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம்
என்பர்.
v (எ.கா) புகு, பசு, விடு, அது, வறு, மாவு, ஏழு.
குற்றியலுகரத்தின் வகைகள்
v குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டு பிரிக்கலாம்.
v அவற்றை ஆறு வகையாகப் பிரிக்கலாம். அவை,
F நெடில்தொடர்க் குற்றியலுகரம்
F ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
F உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
F வன்தொடர்க் குற்றியலுகரம்
F மென்தொடர்க் குற்றியலுகரம்
F இடைத்தொடர்க் குற்றியலுகரம்
நெடில்தொடர்க் குற்றியலுகரம்
è தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘நெடில்தொடர்க் குற்றியலுகரம்’
ஆகும்.
è இது ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும்.
è (எ.கா) பாகு, மாசு, பாடு, காது, ஆறு.
ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
è ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘ஆய்தத்தொடர்க்
குற்றியலுகரம்’ ஆகும்.
è (எ.கா) எஃகு, அஃது.
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
è தனி நெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘உயிர்த்தொடர்க்
குற்றியலுகரம்’ ஆகும்.
è (எ.கா) அரசு (ர = ர் + அ)
கயிறு (யி = ய் + இ)
ஒன்பது (ப = ப் + அ)
வரலாறு (லா = ல் + ஆ)
வன்தொடர்க் குற்றியலுகரம்
è வல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘வன்தொடர்க் குற்றியலுகரம்’
ஆகும்.
è வல்லின எழுத்துகள் – க், ச், ட், த், ப், ற்.
è (எ.கா) பாக்கு, பேச்சு, பாட்டு, பத்து,
உப்பு, பற்று.
மென்தொடர்க் குற்றியலுகரம்
è மெல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘மென்தொடர்க்
குற்றியலுகரம்’ ஆகும்.
è மெல்லின எழுத்துகள் – ங், ஞ், ண், ந், ம், ன்.
è (எ.கா) பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று.
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
è இடையின மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘இடைத்தொடர்க்
குற்றியலுகரம்’ ஆகும்.
è இடையின எழுத்துகள் – ங், ஞ், ண், ந், ம், ன்.
è (எ.கா) எய்து, மார்பு, சால்பு, மூழ்கு.
குறிப்பு
·
தமிழில் எழுத்துகளைக்
குறிப்பதற்கு கரம், கான், காரம், கேனம் ஆகிய எழுத்துச் சாரிகள் பயன்படுத்தப்
படுகிறது.
·
குறில் எழுத்தைக்
குறிக்க ‘கரம்’
(எ.கா) அகரம், இகரம்,
உகரம், ககரம், மகரம்.
·
நெடில் எழுத்தைக்
குறிக்க ‘கான்’
(எ.கா) ஐகான், ஔகான்.
·
குறில், நெடில்
எழுத்தைக் குறிக்க ‘காரம்’
(எ.கா) மகாரம்,
ஏகாரம், ஐகாரம், ஔகாரம்.
·
ஆய்த எழுத்தைக்
குறிக்க ‘கேனம்’
·
(எ.கா) அஃகேனம்.
·
‘வ்’ என்னும்
எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.
· சு, டு, று ஆகிய எழுத்துகள் இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை.
குற்றியலிகரம்
v வரகு + யாது = வரகியாது
v இந்த சொற்களைச் சேர்ந்து ஒழிந்துப் பார்த்தால் ‘கு’ என்னும் எழுத்து ‘கி’
என்று ஒலிக்கிறது.
v ஒரு மாத்திரை அளவிலிருந்து ஒளிக்காமல் அரை மாத்திரை அளவில் குறைந்து
ஒலிக்கின்றது.
v இவ்வாறு தன் ஒரு மாத்திரை அளவில் இருந்து குறுகி ஒலிக்கும் இகரம்
‘குற்றியலிகரம்’ எனப்படும்.
v குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்
v குற்றியலிகரம் இரண்டு இடங்களில் மட்டும் வரும். அவை,
è குற்றியலுகரச் சொற்களைத் தொடர்ந்து யகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள்
வரும்போது குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இகரமாக மாறும்.
è இந்த இகரம் தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாகக்
குறைந்து ஒலிக்கின்றது.
è (எடுத்துக்காட்டுகள்)
Ø கொக்கு + யாது = கொக்கியாது
(க் + உ) (க் + இ)
Ø தோப்பு + யாது = தோப்பியாது
(ப் + உ)
(ப் + இ)
Ø நாடு + யாது = நாடியாது
(ட் + உ) (ட் + இ)
Ø எனப்படுவது + யாது = எனப்படுவதியாது
(த் + உ) (த்
+ இ)
è ‘மியா’ என்பது ஓர் அசைச்சொல். இது ஓசை நயத்திற்காக வரும்.
è இதில் ‘மி’ யில் உள்ள இகரம் குற்றியலிகரம் எனப்படும். (ம் + இ = மி)
è இவை சொற்களில் இடம்பெறும் போது தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கின்றது.
è (எ.கா)
Ø
கேள் + மியா =
கேண்மியா
Ø
செல் + மியா =
சென்மியா
குறிப்பு
·
குற்றியலிகரம் தற்போது
உரைநடை வழக்கில் இல்லை. இலக்கியங்களில் மட்டுமே உள்ளது.