BLOCK EDUCATIONAL OFFICER
(வட்டாரக் கல்வி அலுவலர்)
Part I
தமிழ்
இலக்கணம்
இன எழுத்துகள்
v ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் இவற்றில் உள்ள ஒற்றுமை காரணமாக பிறக்கும்
எழுத்துகள் இன எழுத்துகள் ஆகும்.
v வல்லின மெய் எழுத்துகள் – ஆறு
v மெல்லின எழுத்துகள் – ஆறு
v சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்து அதன் இன எழுத்தாகிய வல்லின எழுத்து
வரும்.
இன எழுத்துகள்
F ங் க்
F ஞ் ச்
F ண் ட்
F ந் த்
F ம் ப்
F ன் ற்
(எ.கா) திங்கள், மஞ்சள், மண்டபம், சந்தனம், அம்பு, தென்றல்
இடையின எழுத்துகள் – ஆறு
F ய், ர், ல், வ், ழ், ள்
è ஆ அ
è ஈ இ
è ஊ உ
è ஏ எ
è ஐ இ
è ஓ ஒ
è ஔ உ
v உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு.
v குறிலுக்கு நெடில் எழுத்தும், நெடிலுக்கு குறில் எழுத்தும் இன எழுத்துகள்
ஆகும்.
v குறில் எழுத்து இல்லாத ஐ - இ என்னும் எழுத்தும் ஔ - உ என்னும் எழுத்தும் இன எழுத்தாகும்.
v அளபெடையில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இன எழுத்தாகிய குறில் எழுத்து
சேர்ந்து வரும்.
v (எ.கா) ஓஓதல், தூஉம், தழீஇ
v ஆய்த எழுத்துக்கு மட்டும் இன எழுத்துகள் இல்லை.
No comments:
Post a Comment