BLOCK EDUCATIONAL OFFICER
(வட்டாரக் கல்வி அலுவலர்)
Part I
தமிழ்
இலக்கணம்
சுட்டு எழுத்துகள், வினா
எழுத்துகள்
சுட்டு எழுத்துகள்
v அவன், இவள், அங்கு, இங்கு, அந்த, இந்த – சுட்டு சொற்கள்
v இவை ஒன்றை சுட்டிக் காட்டுகின்றன.
v அவை சுட்டிக் காட்டுவதற்கு அதில் வரும் முதல் எழுத்து ஆகிய அ, இ எழுத்துகளே
காரணம்.
v ஒன்றைச் சுட்டிக் காட்ட உதவும் எழுத்துகள் சுட்டு எழுத்துகள் ஆகும்.
v அ, இ, உ – சுட்டு எழுத்துகள்
v இதில் ‘உ’ என்னும் எழுத்தை சுட்டு எழுத்தாக பயன்படுத்துவது இல்லை.
v சுட்டு எழுத்துகள் ஐந்து வகைப்படும். அவை,
F அகச்சுட்டு
F புறச்சுட்டு
F அண்மைச்சுட்டு
F சேய்மைச்சுட்டு
F சுட்டுத்திரிபு
அகச்சுட்டு
è இவன், அவன், இது, அது – சுட்டு எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள்
தராது.
è சுட்டு எழுத்து சொற்கள் உள்ளே இருந்து பொருள் தருவது அகச்சுட்டு ஆகும்.
புறச்சுட்டு
è அவ்வானம், இம்மலை, இந்நூல் – சுட்டு எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள்
தரும்.
è சுட்டு எழுத்து சொற்கள் வெளியே இருந்து பொருள் தருவது புறச்சுட்டு ஆகும்.
அண்மைச்சுட்டு
è இவன், இவர், இது, இவை, இம்மரம், இவ்வீடு – இச்சொற்கள் அருகில் உள்ளவற்றைச்
சுட்டுகின்றன.
è எனவே இது அண்மைச்சுட்டு ஆகும்.
è அண்மைச்சுட்டுக்குரிய எழுத்து ‘இ’ ஆகும்.
சேய்மைச்சுட்டு
è அவள், அவர், அது, அவை, அவ்வீடு, அம்மரம் - இச்சொற்கள் தொலைவில் உள்ளவற்றைச்
சுட்டுகின்றன.
è எனவே இது சேய்மைச்சுட்டு ஆகும்.
è சேய்மைச்சுட்டுக்குரிய எழுத்து ‘அ’ ஆகும்.
சுட்டுத்திரிபு
è அம்மரம், இவ்வீடு – ஆகிய சொற்கள் புறச்சுட்டுகள், இதனை அந்த மரம், இந்த வீடு
என்றும் அழைப்பர்.
è அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் மாற்றம் பெற்று அந்த, இந்த என வழங்குகின்றன.
è அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து பொருளைத் தருவது
சுட்டுத்திரிபு ஆகும்.
வினா எழுத்துகள்
v எ, யா, ஆ, ஓ, ஏ – ஐந்தும் வினா எழுத்துகள்
v வினாப்பொருளைத் தரும் எழுத்துகள் வினா எழுத்துகள் ஆகும்.
v சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் வரும். சில வினா எழுத்துகள் சொல்லின்
இறுதியில் வரும்.
F எ, யா (எங்கு, யாருக்கு) – மொழியின் முதலில் வரும் எழுத்துகள்
F ஆ, ஓ (பேசலாமா, தெரியுமோ) - மொழியின் இறுதியில் வரும் எழுத்துகள்
F ஏ (ஏன், நீதானே) - மொழியின் முதலிலும் இறுதியிலும்
வரும் எழுத்துகள்
v வினா எழுத்துகள் இரண்டு வகைப்படும். அவை,
F அகவினா
F புறவினா
அகவினா
è எது, யார், ஏன் – வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தராது.
è வினா எழுத்துகள் சொல்லின் உள்ளே இருந்து வினா பொருளைத் தருவது அகவினா ஆகும்.
புறவினா
è அவனா? வருவானோ? – இதில் உள்ள ஆ, ஓ எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள்
தரும்.
è வினா எழுத்து சொல்லின் வெளியே இருந்து வினா பொருளைத் தருவது புறவினா ஆகும்.
No comments:
Post a Comment