BLOCK EDUCATIONAL OFFICER
(வட்டாரக் கல்வி அலுவலர்)
Part I
தமிழ்
இலக்கணம்
அணி இலக்கணம்
v அணி என்பதற்கு அழகு என்பது பொருள்.
v
நாம் நம்மை அணிகலன்களால்அழகுப்படுத்துவது போல,
v
கவிஞர்கள் தங்கள் கற்பனைத் திறத்தாலும் புலமையாலும் தாங்கள் இயற்றும்
பாடல்களுக்கு அழகுச் சேர்க்கின்றனர்.
v
இதனை விளக்குவது அணி இலக்கணம் ஆகும்.
v
கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி ஆகும்.
v
மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளைச் சுவைபடக் கூறுவது அணி
ஆகும்.
v
இதனை இரு வகைப்படுத்துவர். அவை,
F
இயல்பு நவிற்சி
அணி
F
உயர்வு நவிற்சி
அணி
இயல்பு நவிற்சி அணி
è
ஒரு பொருளின்
இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும்.
è
இதனை தன்மை
நவிற்சி அணி என்றும் அழைப்பர்.
è (எ.கா) தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்குது வெள்ளைப்பசு – உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளைப்பசு – பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி
__ கவிமணி
தேசிக விநாயகனார்.
è
இதில் கவிஞர்
பசுவும் கன்றும் ஒன்றுடன் ஒன்று கொஞ்சி விளையாடுவதை இயல்பாக கூறியுள்ளார்
è
எனவே இது இயல்பு
நவிற்சி அணி ஆகும்.
உயர்வு நவிற்சி அணி
è
ஒரு பொருளின் இயல்பை
மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.
è (எ.கா) குளிர்நீரில் குளித்தால்
கூதல் அடிக்குமென்று
வெந்நீரில் குளித்தால்
மேலே கருக்குமென்று
ஆகாச கங்கை
அனல் உறைக்குமென்று
பாதாள கங்கையைப்
பாடி அழைத்தார் உன் தாத்தா
è
இது ஒரு தாய்
பாடும் தாலாட்டுப் பாடல் ஆகும்.
è
இதில் உயர்வு
நவிற்சி அணி அமைந்துள்ளது.
No comments:
Post a Comment