Friday

வாணிதாசன்

  GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

மரபுக் கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.

வாணிதாசன்

இயற்பெயர் : எத்திராசலு (எ) அரங்கசாமி

பெற்றோர் : அரங்கதிருக்காமு, துளசியம்மாள்

பிறந்த ஊர் : புதுவை அடுத்த வில்லியனூர்

காலம் : 22/7/1915 – 7/8/1974

சிறப்புப்பெயர்கள் : பாவலர் மணி, தமிழ்நாட்டுத் தாகூர், புதுமைக் கவிஞர், பாவலரேறு.

நூல்கள் : தமிழச்சி, பாட்டு பிறக்குமடா, கொடி முல்லை, சிரித்த நுணா, எழிலோவியம், குழந்தை இலக்கியம், இரவு வரவில்லை, எழில் விருத்தல், தொடுவானம், தீர்த்தயாத்திரை, வாணிதாசன் கவிதைகள், இன்ப இலக்கியம், இனிக்கும் பாட்டு, பொங்கல் பரிசு, பாட்டரங்கப் பாடல்கள்.

குறிப்பு :

F இவருக்கு கவிஞரேறு, பாவலர் மணி என்ற பட்டங்களை பெற்று இருக்கிறார்.

F தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று அழைக்கப்பட்டார்.

F இவருடைய பாடல்கள் உருசியம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் மொழிப்பெயர்க்கப் பட்டுள்ளது.

F இவருக்கு ‘ரமி’ என்ற புனைப்பெயரும் உண்டு.

F பாரதிதாசனின் மாணவர். இவரிடம் தொடக்கக்கல்வி பயின்றுள்ளார்.

F இவருடைய பாடல்கள் வாணிதாசன் கவிதைகள் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

F இவரது பாடல்கள் சாகித்திய அகாதெமியில் வெளியிட்ட தமிழ்கவிதை என்ற நூலில் வெளியாகியது.

F தென் மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட புதுத்தமிழ்க் கவிமலர்கள் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

F இவர் தமிழ் – பிரெஞ்சு கையகர முதலி என்ற நூலை வெளியிட்டுள்ளார்.

F இவருக்கு பிரெஞ்சுக் குடியரசுத் தலைவர் செவிலியர் விருதை வழக்கியுள்ளார்.

F இவரது முதல் நூல் தமிழச்சி ஆகும்.

F இவருடைய கவிதைகள் ஆனந்த விகடன், பொன்னி, பிரசண்ட விகடன், மன்றம், முரசொலி போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளது.

F பாரதிதாசனை அடுத்து இயற்கை அழகை மிகுதியாக பாடியவர்.

F சமதர்ம நோக்கும் சீர்திருத்தப் போக்கும் கொண்டவர்.

F பாவேந்தர் விருது பெற்றுள்ளார்.

மேற்கோள் :

è இடுவெயில் போல் உழைக்கும் சேரி வாழ் ஏழைமக்கள்.........

è ஓடைப் புது மலர்த் தாமரை நீ..........

è பாரதிதாசன் பெயரை உரைத்திடப் பாட்டுப் பிறக்குமடா..........

è மக்கட்கே வானை என்றும் மடக்கிநீ அனுப்பி வைத்தாய்.........

è நிலவில் பாரி அடிப்பதுவும் நீரில் ஓரி அடிப்பதுவும்............

è பிறப்பினிலே தாழ்ந்த உயிர் உயர்ந்த உயிர் இல்லை...........

Thursday

முடியரசன்

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

மரபுக் கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.

முடியரசன்

இயற்பெயர் : துரைராசு

பெற்றோர் : சுப்பராயலு, சீதாலட்சுமி

பிறந்த ஊர் : தேனி மாவட்டம் பெரியகுளம்

காலம் : 7/10/1920 – 3/12/1998

சிறப்புப்பெயர்கள் : திராவிட இயக்கக் கவிஞர்

நூல்கள் : வீரகாவியம், பூங்கொடி காவியம், காவியப்பாவை, பாடும் குயில், சுவரும் சுண்ணாம்பும், முடியரசன் கவிதைகள், ஞாயிறும்  திங்களும், மனிதனை தேடுகிறேன், நெஞ்சம் பொறுக்குதில்லையே.

குறிப்பு :

F காரைக்குடி மீனாட்சி சுந்தரம் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.

F இவருடைய பூங்கொடி என்ற காவியத்திற்கு 1966 ல் தமிழக அரசு பரிசு வழங்கியது. மற்றும் இந்த காவியம் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசு பெற்றது.

F முடியரசன் கவிதைகள் என்ற நூல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது.

F பிரம்பு மலையில் நடத்த விழாவில் குன்றக்குடி அடிகளார் இவருக்கு கவியரசு என்ற பட்டத்தை வழங்கியது.

F இவருடைய கவிதைகளைச் சாகித்திய அகாடெமி அமைப்பு இந்தியிலும், ஆங்கிலத்திலும் மொழிப்பெயர்ந்துள்ளது.

F இவர் சடங்குகளை மறுப்பவர், நான் இறந்தாலும் எந்த செய்ய கூடாது என்று கூறியுள்ளார்.

F இவரது கவிதைகள் போர்வாள், குயில், கதிரவன் போன்ற இதழ்களில் வெளியானது.

F இவருடைய கவிதைகள் பொன்னி இதழில் வெளிவந்தால் இவரைப் பாரதிதாசன் பரம்பரை என்று அழைத்தனர். ஏனென்றால் இவர் பாரதிதாசனின் பரம்பரை கவிஞர்களில் மூத்தவர் ஆவார்.

F இவர் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியாரைப் பற்றி ஊன்றுகோல் என்ற நாடகத்தை இயற்றியுள்ளார்.

F தமிழ்நாட்டின் வானம்பாடி என்று அறிஞர் அண்ணா புகழுந்துள்ளார்.

F இவர் தமிழ் என் தாய், தமிழ் என் தெய்வம், தமிழ் என் தந்தை, தமிழ் என் காதலி, தமிழ் என் மகன் என்று பல்வேறு தலைப்புகளில் தமிழைப் பற்றி எழுதி உள்ளார்.

F சுயசரிதை – பாட்டு பறவையின் வாழ்க்கை பயணம்.

மேற்கோள் :

è வயலுக்கு வரப்பொன்றும் வேண்டாம் என்றால்.........

è இன்பம் ஒருகரை துன்பம் ஒருகரை..........

è காட்சிக்கு புலியாகி கொடுமை மாலி..........

è ஆங்கிலமோ பிற மொழியோ பயின்று விட்டால்..........

è மணவினையில் தமிழுண்டோ பயின்றார்.........

è ஆட்சிக்கு அஞ்சாமல் யாவரேனும் ஆள்க...........

Wednesday

கவிமணி தேசிக விநாயகனார்

     GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார் தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

பெற்றோர் : சிவதானுப் பிள்ளை, ஆதிலட்சுமி அம்மாள்

காலம் : 27/7/1876 – 26/9/1954

பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம் தேரூர்

துணைவியார் : உமையம்மாள்

சிறப்புப்பெயர்கள் : கவிமணி, தேவி

நூல்கள் : ஆசிய ஜோதி, உமர்கய்யாம் பாடல்கள், தேவியின் கீர்த்தனைகள்,மலரும் மலையும், மருமக்களின் வழி மான்மியம், குழந்தை செல்வம், காந்தளூர் சாலை, கதர் பிறந்த கதை.

மேற்கோள் :

è தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு.........

è மங்கையாராக பிறப்பதற்கே நல்ல............

è உண்மையும் உள்ளத்து எழுச்சியும்...........

è ஊக்கம் உடையவர்க்கு.........

è ஔவை கிழவி நம் கிழவி.........

குறிப்பு :

F “அழகம்மை ஆசிரியவிருத்தம்” இவரது முதல் நூல் 1895 ல் வெளியானது.

F தமிழின் முதல் குழந்தை கவிஞர் என போற்றப்பட்டார்.

F இவர் BABY என்ற ஆங்கில படலை தமிழில் “குழந்தை” என்னும் தலைப்பில் மொழிப்பெயர்ந்தார்.

F இவர் ஆங்கில கவிஞர் எட்வின் அர்னால்டு எழுதிய “LIGHT OF ASIA” என்ற நூலை “ஆசிய ஜோதி” என்று தமிழில் மொழிப்பெயர்ந்தார்.

F பாரசீக கவிஞர் உமர்கய்யாம் பாடல்களை இவர் தமிழில் “உமர்கய்யாம் பாடல்கள்” என தமிழில் மொழிப்பெயர்ந்தார்.

F இதனை ஆங்கிலத்தில் எட்வர்டு பிட்ஸ், ஜிரால்டு என்பவர்கள் மொழிப்பெயர்ந்தனர்.

F இவர் வெண்பா இயற்றுவதில் புலமை பெற்றவர்.

F கவிதைக்கு புது இலக்கணத்தை கூறியவர்.

F இவருடைய குழந்தைப் பாடல்கள் தான் இவருக்கு சிறப்பை பெற்றுக் கொடுத்தது.

சிறப்பு :

v  நாமக்கல்லார் – இவருடைய கவிப் பெருமையை தினமும் கேட்பது என் செவிக்கு பெருமை என்று கூறியுள்ளார்.

v  சண்முகம் – இவரின் கவிதையை புரிந்து கொள்ள பண்டிதராக இருக்க தேவையில்லை, படிக்கத் தெரிந்த எவரும் பொருள் புரிந்துக் கொள்ளக்கூடிய எளிய நடை.

v  வள்ளியப்பா – “தேனொழுகக் கவிபாடும் தேசிக விநாயகமே”.

v  டி.கே.சி. – இவரின் பாடல்கள் தமிழ் மக்களுக்கு கிடைத்த பெருஞ்செல்வம் அதனை கொண்டு அனுபவிக்க வேண்டிய வாடாத கற்பகப்பூச்செண்டு.

v  இவர் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியை தொடங்கி கல்லூரியில் பேராசிரியராக பணிப்புரிந்தார்.

v  இவருடைய ஆசிரியர் பெயர் சாந்தலிங்க தம்பிரான். இவரிடம் இலக்கிய இலக்கணத்தை கற்று சமய அறிவை வளர்ந்துக் கொண்டார்.

v  டிசம்பர் 24 1940 ல் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்க தலைவர் உமாகாமேசுவரானார் இவருக்கு கவிமணி என்ற பட்டத்தை வழங்கினார்.

v  இவருக்கு தேரூரில் ஒரு நினைவு இல்லம் 1954 ல் வைக்கப்பட்டுள்ளது.

v  2005 ல் அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.

கல்யாண்ஜி

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...