Wednesday

TNPSC Online Test Tamil (தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்) Test - 1

TNPSC Tamil online test

1. தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி என்று யாரை அழைப்பர்?
  1. (A) பாரதிதாசன்
  2. (B) பாரதியார்
  3. (C) முடியரசன்
  4. (D) வாணிதாசன்
2.     இருட்டறையில் உள்ளதடா உலகம் என்ற பாடலைப் பாடியவர்?
  1. (A)கவிமணி
  2. (B)பாரதிதாசன்
  3. (C)பாரதியார்
  4. (D)முடியரசன்
3.     நாமக்கல் கவிஞருக்கு பத்மபூஷண் விருது எந்த அரசு வழங்கியுள்ளது?
  1. A)மாநில அரசு
  2. (B)ஆங்கில அரசு
  3. (C)நடுவண் அரசு
  4. (D)பிரெஞ்சு அரசு
4.     “மருமக்கள் வழி மான்மியம்” என்ற நூலை எழுதியவர் யார்?
  1. (A)பாரதியார்
  2. (B)கவிமணி
  3. (C)வாணிதாசன்
  4. (D)பாரதிதாசன்
5.     தமிழக அரசின் பரிசைப் பெற்ற முடியரசனின் காவியம்?
  1. (A)பூங்கொடி
  2. (B)மணிக்கொடி
  3. (C)தேன்மழை
  4. (D)பால்வீதி
6.     தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று பாராட்டப்படும் தமிழ்க் கவிஞர் யார்?
  1. (A)வாணிதாசன்
  2. (B)நாமக்கல் கவிஞர்
  3. (C)பாரதிதாசன்
  4. (D)முடியரசன்
7.     தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசுப் பெற்ற சுரதாவின் நூல் ஏது?
  1. (A)நிலவுப்பூ
  2. (B)தேன்மழை
  3. (C)துறைமுகம்
  4. (D)பூங்கொடி
8.     கல்லக்குடி மகாகாவியம் என்ற நூலின் ஆசிரியர்?
  1. (A)கம்பர்
  2. (B)கண்ணதாசன்
  3. (C)சுரதா
  4. (D)மேத்தா
9.     பகுத்தறிவுக் கவிராயர் என அழைக்கப்படுபவர் யார்?
  1. (A)நாமக்கல் கவிஞர்
  2. (B)பாரதிதாசன்
  3. (C)முடியரசன்
  4. (D)உடுமலை நாராயண கவி
10.     மக்கள் கவிஞர் யார்?
  1. (A)கல்யாண சுந்தரம்
  2. (B)கவிமணி
  3. (C)பாரதிதாசன்
  4. (D)முடியரசன்
Score

Answers are:

Tuesday

இரா.மீனாட்சி

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

இரா.மீனாட்சி

பெற்றோர் : இராமசந்திரன், மதுரம்    

பிறந்த ஊர் : திருவாரூர்        

படைப்புகள் : கொடிவிளக்கு, நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளி பகல், மறுபயணம், வாசனைப்புல், செம்மண் மடல்கள், சிற்றகல், பிறத்தல் அதன் சுதந்திரம், கொங்குத்தேவர் வாழ்க்கை, புனிதச் சமையல், சிறுபாணன் சென்ற பெருவழி, பனை மரமும் நாட்டுப்புற மக்களும், அருகி வரும் மாட்டுவண்டி, மொழிவளம் பெற, தமிழில் கடித இலக்கியம்.      

குறிப்பு :

Ø  இவர் ஒரு நவீன பெண் கவிஞர் ஆவார்.

Ø  இவர் ஒரு சமூக சேவகி ஆவார்.

Ø  இவர் எழுத்து, தீபம், கணையாழி, அண்ணம்விடு தூது, கவி போன்ற இதழ்களில் கவிதைகளை எழுதியுள்ளார்.

Ø  இவருடைய ஆங்கில படைப்பு இந்தியப் பெண் கவிகள் பேசுகிறார்கள் என்பது ஆகும்.

Ø Seeds France, Dust and Dreams என்ற கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

Ø  இவர் எழுதிய உதய நகரிலிருந்து என்னும் நூலுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசைப் 2006 ல் பெற்றதுள்ளது.

Ø இவர் 2007   ல் கல்லாடனார் இலக்கிய விருதும், திருப்பூர் தமிழ் சங்க விருதும் பெற்றுள்ளார்.  

Ø  இவர் 2010 ல் புதுவை பாரதி விருதும், கவிக்கோ விருதும் பெற்றுள்ளார். 

Ø  இவர் 1982 ல் கவியோகி சுத்தானந்த பாரதி தலைமையில் நடந்த கவியரங்கில் கவிதைகள் பாடியுள்ளார்.

Ø  இவர் 2005 ல் கவிஞர் சிற்பி என்ற இலக்கிய விருதைப் பெற்றுள்ளார்.  

Ø  இவர் சிறந்த கல்லூரிப் பேச்சாளருக்கான தங்கப்பதக்கத்தை கோவை பூ.சா.கோ.நாவலர் மன்றத்தின் சார்பில் பெற்றுள்ளார்.  

Ø  இவர் புதுச்சேரியில் உள்ள ஆரோவில்லில் 1976 ல் இணைந்தார்.

Ø  பாரதி, பாரதிதாசனுக்கு பிறகு பெண் உரிமைப் பற்றி அதிகம் எழுதியுள்ளார்.

Ø  இவருடைய கவிதைகள் முழுவதும் மீனாட்சி கவிதைகள் என்ற தொகுப்பில் நூலாக வெளியாகியுள்ளது. அதில் 191 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

மேற்கோள் :

v  எவனோ எழுதி வைத்த…………………

Saturday

பசுவய்யா

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

பசுவய்யா

இயற்பெயர் : சுந்தர ராமசாமி

பிறந்த ஊர் : நாகர்கோவிலில் உள்ள மகாதேவர் கோவில்   

காலம் : 30/5/1931 – 14/10/2005  

படைப்புகள் : நடுநிசி நாய்கள், ஜே.ஜே. சில குறிப்புகள், காற்றில் கரைந்த பேரோசை, யாரோ ஒருவனுக்காக, ஒரு புளியமரத்தின் கதை, அக்கரைச் சீமையில், பிரசாதம், வாழ்க சந்தேகங்கள், மூன்று நாடகங்கள், வானமே இளவெயிலே மரச்செறிவே, இறந்தகாலம் பெற்ற உயிர், குழந்தைகள் பெண்கள் ஆண்கள், தண்ணீர் அடைக்கலம், அகம், ஆளுமைகள், மதிப்பீடுகள், அந்த ஐந்து நிமிடங்கள்,லல்வு, கைக்குழந்தை, செங்கமலமும் ஒரு சோப்பும், கிடாரி, பக்த துளசி, ஒரு நாய், ஒரு சிறுவன், ஒரு பாம்பு, ஸ்டாம்பு ஆல்பம், லீலை, தயக்கம், பள்ளம், டால்டாய்ஸ் தாத்தாவின் கதை.          

குறிப்பு :

Ø  இவர் சாந்தி, சதங்கை, ஞானரதம், தீபம், இலக்கியவட்டம், கசடதபற, போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.

Ø  தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன், தோட்டியின் மகன் என்ற இரண்டு புதினங்களையும் மலையாளத்திலிருந்து மொழி பெயர்ந்துள்ளார்.

Ø  இவருக்கு குமரன் ஆசான் நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது.

Ø  தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருதினையும் 2001 ல் இவர் பெற்றுள்ளார்.

Ø  இவருக்கு 2004 ல் கதா சூடாமணி விருது வழங்கப்பட்டது.  

Ø  இவரை புதுக்கவிதையின் துருவ நட்சத்திரம் என்றும் அழைத்தனர்.

Ø  இவருக்கு சுந்தரராமசாமி என்ற பெயரில் தமிழ் கணினிக்கான விருது, இளம் படைப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

Ø  இவர் காலச்சுவடு என்ற பத்திரிக்கையை 1988 ல் நடத்தியுள்ளார்.    

Ø  தொலைவிலிருந்து கவிதைகள் இவரது மொழி பெயர்ப்பு நூல் ஆகும்.

Ø  இவர் மலையாளம், ஆங்கிலம், தமிழ் போன்ற மொழிகளில் நூல்களை மொழி பெயர்ந்துள்ளார்.

Ø  இவர் நினைவோடைகள் என்ற தலைப்பில் நாகராஜன், க.நா.சுப்பிரமணியம், தி.ஜானகிராமன், பிரமிள், ஜீவா, கிருஷ்ணன்நம்பி, சி.த.செல்லப்பா ஆகியோரைப் பற்றி எழுதியுள்ளார்.

மேற்கோள் :

v  நகத்தை வெட்டியெறி………………..

Thursday

தருமு சிவராமு

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

தருமு சிவராமு

இயற்பெயர் : சிவராமலிங்கம்

பிறந்த ஊர் : இலங்கையில் உள்ள திரிகோண மலை  

காலம் : 20/4/1939 – 6/1/1997

சிறப்புப்பெயர்கள் : பிரமிள், பானுசந்திரன், அரூப்சிவராம்  

படைப்புகள் : கண்ணாடி உள்ளிலிருந்து, கைப்பிடியளவு கடல், மேல்நோக்கிய பயணம், பிரமிள் கவிதைகள், மார்க்சும் மார்க்ஸீயமும், நட்சத்ரவாசி, ஆயி, பிரசன்னம், பிரமிள் படைப்புகள், லங்காபுரிராஜா, கிசுகிசு, சாமுண்டி, கருடனூர் ரிப்போர்ட், அங்குலிமாமா, நீலம், அசரீரி, பாறை, கோடாரி, சந்திப்பு, யாழ்கவிதைகள், சூரியன் தகித்த நிறம், காலவெளிக்கவிதை, எதிர்ப்புச்சுவடுகள், தியானதாரா, வானமற்றவெளி, சீறிலங்காவின் தேசிய தற்கொலை, வெயிலும் நிழலும், பாதையிலா பயணம், பீட்டர் வோர்ஸ்லி, விடுதலையும் கலாச்சாரமும்.        

குறிப்பு :

Ø  இவர் இலக்கையில் பிறந்து சிறுவயதிலேயே சென்னையில் வந்து குடியேறியுள்ளார்.

Ø  சி. சு. செல்லப்பா இவரை படிகச் சிற்பி என்று கூறியுள்ளார்.

Ø  இவரை மறுமலர்ச்சி கால புதிக்கவிஞர் என்றும் அழைத்தனர்.

Ø  நியூயார்க் தமிழ்ச்சங்கம் இவருக்கு புதுமைப்பித்தன் விருதை 1996 ல் வழங்கியது.   

Ø  புதுமைப்பித்தன் வீறு என்ற விருதை கும்பகோணம் நீலக்குயில் வழங்கியது.

Ø  இவர் இளம் வயதிலே மெளனியின் கதைத் தொகுப்பிற்கு முன்னுரை எழுதியுள்ளார்.

Ø  தமிழின் மாமேதை என்று இவரை தி. ஜானகிராமன் பாராட்டியுள்ளார்.

மேற்கோள் :

v  கரித்துண்டு ஒன்றுக்கு......................

v  இறகு ஒன்று காற்றின்......................  

Wednesday

சி.சு.செல்லப்பா

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் –தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

சி.சு.செல்லப்பா

பிறந்த ஊர் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு  

காலம் : 29/9/1912 – 18/12/1998

படைப்புகள் : ஜீவனாம்சம், வாடிவாசல், சுதந்திர தாகம், சரசாவின் பொம்மை, மணல் வீடு, அறுபது, வெள்ளை என்ற ஐந்து தொகுதிகள், சத்தியாக்ரகி, முறைப்பெண், மாற்று இதயம், இன்று நீ இருந்தால், இலக்கியத் திறனாய்வு, எனது சிறுகதைகள், ந. பிச்சமூர்த்தி கதைகள், புதுக்குரல்கள், தமிழ் இலக்கிய விமர்சனம், தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது.

குறிப்பு :

Ø  இவர் கல்லூரி படிக்கும் போது காந்தியின் மீது கொண்ட ஈர்ப்பினால் விடுதலை போராட்டத்தில் எல்லாம் கலந்துக் கொண்டார்.

Ø  இவர் தினமணி கதிரிலும் பணி செய்துள்ளார்.

Ø  சுதந்திர சங்கு இதழை தொடங்கி அதனை மணிக்கொடி என்பதில் வெளியிட்டார்.

Ø  மணிக்கொடி, கலாமோகினி இதழ்கள் வலுவற்ற நிலையில் அவற்றிற்கு உறுதுணையாக வந்தது இவருடைய எழுத்து என்ற இதழ்.

Ø  எழுத்து என்ற இதழ் தமிழ்ச் சிறுபத்திரிக்கைகளின் முன்னோடியாக திகழ்ந்தது.  

Ø  சுதந்திர தாகம் என்ற புதினத்திற்கு 2001 ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.   

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...