GROUP II & II A
தமிழ்
பகுதி – இ
தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்
புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி,
சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும்
எழுதிய நூல்கள்.
அப்துல்ரகுமான்
இயற்பெயர் : அருள்வண்ணன்
பெற்றோர் : மஹி, ஜைனத் பேகம்
பிறந்த ஊர் : மதுரை
காலம் : 1937
படைப்புகள் : சிலந்தியின்
வீடு, தீபங்கள் எரியட்டும், பறவைகளின் பாதை, பால்வீதி, கரைகளே நதியாவதில்லை,
சுட்டுவிரல், அவளுக்கு நிலா என்று பெயர், நேயர் விருப்பம், முட்டைவாசிகள்,
பித்தன், மரணம் முற்றுப்புள்ளி அல்ல, ஆலாபனை, சொந்தச் சிறைகள், இல்லையிலும்
இருக்கிறான், எம்மொழி செம்மொழி, தேவகானம், சலவை மொட்டு, தீக்குச்சி, ஆல்போல்
விழுந்தவன், விலங்குகள் இல்லாத கவிதை, உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன், குணங்குடியார் பாடற் கோவை.
குறிப்பு :
Ø
இவர் தமிழ் அன்னை விருது மற்றும்
பாரதி தாசன் விருதுகளைப் பெற்றுள்ளார்.
Ø
இவருடைய ஆலாபனை என்ற நூலுக்கு
சாகித்திய அகாதமி விருது கிடைத்துள்ளது.
Ø
இவர் கவிக்கோ என்ற பட்டத்தையும்
பெற்றுள்ளார்.
Ø
இவரை மரபுக் கவிதையின் வேர்
பார்த்தவர் புதுக்கவிதையில் மலர் பார்த்தவர் என்று போற்றுகின்றனர்.
Ø
இவர் ஹைக்கூ, கஜல் போன்ற கவிதைகளை
தமிழில் வழங்கியுள்ளார்.
மேற்கோள் :
v இரவெல்லாம் உன் நினைவுகள்
கொசுக்கள்…………………..
v வரங்களே சாபங்கள்
ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக…………………………….
v தீப மரத்தின் தீக்கனி
உண்ண விட்டில் வந்தது…………………………………….