GROUP II & II A
தமிழ்
பகுதி – இ
தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்
புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி,
சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி
இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் – தொடர்பான செய்திகள்,
மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.
ஆலந்தூர்
மோகனரங்கன்
இயற்பெயர் :
பிறந்த ஊர் : செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூர்
பெற்றோர் : கோபால், மீனாம்பாள்
படைப்புகள் : பள்ளிப்
பறவைகள், மோகனரங்கன் கவிதைகள், இமயம் எங்கள் காலடியில், சித்திரப் பந்தல், காலக்கிளி,
வைர மூக்குத்தி, மனித நேயம், மனிதனே புனிதனாவாய், புதுமனிதன், யாருக்குப் பொங்கல்,
கயமையைக் களைவோம், அழகிய தமிழில் எழுதுங்கள், வண்ணத்தமிழ், நினைத்தால் இனிப்பவளே,
வாழ்வதற்கு மனிதர்கள் தேவை, இளைய தலைமுறை எழுந்து நிற்கட்டும், இதயமே
இல்லாதவர்கள், பொய்யே நீ போய்விடு, கனவுப் பூக்கள், வணக்கத்துக்குரிய வரதராசனார், சவால்
சம்பந்தம்.
குறிப்பு :
Ø இவர் தொலைக்காட்சி,
பாவரங்க மேடை, வானொலி போன்ற ஊடகங்களில் பணியாற்றியுள்ளார்.
Ø இவர் நாவல், கவிதை
நாடகம், மரபுக்கவிதை, சிறுகதை, இசைப் பாடல்கள் போன்றவற்றில் புலமைப் பெற்றவர்.
Ø இவர் இளங்கவிஞர்களை
உருவாக்க பல போட்டிகளை நடத்தியுள்ளார்.
Ø இவர் பாட்டரங்கப் பாவலராய்ப்
புகழப் பெற்றுள்ளார்.
Ø இவர் புதிய பாதை என்னும்
கையெழுத்து ஏடு நடத்தி வந்துள்ளார்.
Ø இவர் கவிதை வட்டம்
என்ற இலக்கிய அமைப்பை நடத்தியுள்ளார்.
Ø இவரது இமயம்
எங்கள் காலடியில், வணக்கத்திற்க்குரிய வரதராசனார் கதை என்ற நூல்களுக்கு தமிழக
அரசின் பரிசுப் பெற்றுள்ளார்.
Ø இவர் வணக்கத்திற்க்குரிய
வரதராசனார் கதை என்ற தலைப்பில் மு.வா. அவர்களின் கதையை கூறியுள்ளார். அதுபோல
தாத்தாவுக்குத் தாத்தா என்ற தலைப்பில் மீனாட்சி சுந்தரம் அவர்களின் வாழ்க்கை கதையை
கூறியுள்ளார்.
Ø இவர் குறுந்தொகையின்
குழந்தைகள், குறும்பா என்ற இரண்டு ஹைக்கூ கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.
Ø இவருக்கு பொன்னம்மா
புதுமைப் பெண் என்ற நாடகத்திற்கு ஏ.வி.எம் தங்கப் பதக்கம் கொடுத்துள்ளது.
Ø இவருக்கு கவிவேந்தர்
என்ற பட்டம் கிடைத்துள்ளது.