எட்டுத்தொகை - ஐங்குறுநூறு
ஆடுகம் விரைந்தே
காயா கொன்றை நெய்தல் முல்லை
போதவிழ் தளவொடு பிடவலர்ந்து கவினிப்
பூவணி கொண்டன்றால் புறவே
பேரமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே
பாடல் விளக்கம்:
[பொருளீட்டுவதற்காக வெளியூர் சென்றான் தலைவன். அவன்,தான் வருவதாகச்
சொல்லிவிட்டுச் சென்ற காலத்திற்கு முன்னரே வீட்டிற்குத் திரும்புகிறான். வருவதாகக்
கூறிச் சென்ற மழைக்காலம் முடியும் முன்னே வந்துவிட்டதனை உணர்த்த நினைக்கிறான்.]
பெரிய அழகிய கண்களையுடையவளே! அழகிய மாலை நேரத்தில் முல்லை நிலத்தில் காயா, கொன்றை,
நெய்தல், முல்லை, செம்முல்லை, பிடவம் ஆகிய மலர்கள் பூத்திருக்கின்றன. அப்பூக்களைப்
பார்த்து மகிழ்ந்து ஆட, ‘விரைந்து வா’ என்று தலைவன் தன் தலைவியை அழைக்கிறான்.
No comments:
Post a Comment