BLOCK EDUCATIONAL OFFICER
(வட்டாரக் கல்வி அலுவலர்)
Part I
தமிழ்
இலக்கணம்
மொழி முதல், இறுதி எழுத்துகள்
v மொழி – சொல் என்னும் பொருள்
v சொல்லின் முதலில் வரும் எழுத்துகளை
மொழி முதல் எழுத்து என்பர்.
சொல்லின் முதலில் வரும் எழுத்துகள்
F உயிர் எழுத்து பன்னிரண்டும்
F க, ச, த, ந, ப, ம – இந்த வரிசையில் வரும் எல்லா
உயிர்மெய் எழுத்துகளும்
F
(எ.கா) கடல், காக்கை, கிழக்கு, கீற்று, குருவி, கூந்தல்,
கெண்டை, கேணி, கைகள், கொக்கு, கோலம், கௌதாரி
F
ங, ஞ, ய, வ – இந்த வரிசையில் சில எழுத்துகள் மட்டும் வரும்.
F ங – ஓர் எழுத்து மட்டும் வரும்.
F (எ/கா) ஙனம்
è அங்ஙணம், இங்ஙணம், எங்ஙணம்
F ஞ – ஞ, ஞா, ஞெ, ஞொ – நான்கு எழுத்துகள்
F ய – ய, யா, யு, யூ, யோ, யௌ – ஆறு எழுத்துகள்
F வ – வ, வா, வி, வீ, வெ, வே, வை, வௌ – எட்டு எழுத்துகள்
மொழிக்கு முதலில் வராத எழுத்துகள்
F மெய்யெழுத்து பதினெட்டும்
F ட, ண, ர, ல, ழ, ள, ற, ன – எட்டு உயிர்மெய்
எழுத்துகள்
F ஆய்தஎழுத்து முதலில் வராது.
F ங, ஞ, ய, வ – இதை தவிர பிற உயிர்மெய் எழுத்துகள்
மொழி இறுதி எழுத்துகள்
v சொல்லின் இறுதியில் வரும்
எழுத்துகளை மொழி இறுதி எழுத்து என்பர்.
F உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யுடன் இணைந்து உயிர்மெய் எழுத்தாக வரும்.
F ஞ், ண், ந், ம், ய், ர், ல், வ், ழ், ள், ன் – பதினொன்று மெய்யெழுத்துகள்
F (எ.கா) உரிஞ், வெரிந், அவ்)
F அளபெடை எழுத்துகளில் இடம்பெறும் போது உயிர் எழுத்துகள் இறுதில் வரும்.
மொழி இறுதியாகா எழுத்துகள்
F உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை.
F ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது.
F க், ங், ச், ட், த், ப், ற் – ஏழு மெய்
எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வராது.
F ‘ங’ எழுத்து வரிசை சொல்லின் இறுதியில்
வராது.
F எகர வரிசையில் கெ முதல் னெ வரை உள்ள உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இறுதியில் வருவதில்லை.
F ஒகர வரிசையில் நொ தவிர பிற உயிர்மெய்
எழுத்துகள் சொல்லின் இறுதியில் வராது.
F (நொ – துன்பம்) ஒரெழுத்து ஒரு மொழி
சொல்லின் இடையில் வரும் எழுத்துகள்
F மெய் எழுத்து பதினெட்டும்
F உயிர்மெய் எழுத்துகள்
F ஆய்த எழுத்து
F அளபெடையில் மட்டும் உயிரெழுத்து இடையில் வரும்.
No comments:
Post a Comment