Wednesday

உடுமலை நாராயண கவி

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

மரபுக் கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.

உடுமலை நாராயண கவி

இயற்பெயர் : நாராயணசாமி  

பெற்றோர் : கிருஷ்ணசாமிசெட்டியார், முத்தம்மாள்    

பிறந்த ஊர் : கோயம்புத்தூரில் உள்ள உடுமலைப்பேட்டை

காலம் : 25/9/1899 - 23/5/1981

சிறப்புப்பெயர்கள் : பகுத்தறிவு கவிராயர், கலைமாமணி, கவிவாணர், பெரியார் பெருந்தொண்டர்.              

குறிப்பு :

Ø  நாட்டுப்புறப் பாடல் மொட்டுகளைத் திரைபடத்திற்கு அறிமுகம் செய்தவர்.

Ø  கலைவாணர் என. எஸ். கிருஷ்ணவால் திரை உலகத்திற்கு வந்தார்.

Ø  இவர் நாடகங்கள் உரையாடல்கள் பாடல்கள் என பல  எழுதியுள்ளார்.

Ø  இவர் திரைப்பட ஆசிரியரும் நாடக எழுத்தாளரும் ஆவார்.

Ø  கிராமியக் கலைகளிலும் நாடகக் கலைகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

Ø  சுதந்திரப் போராட்டம் இவரை தேசப்பற்று பாடல்களை எழுத தூண்டியது.

Ø  இவருடைய 25 வது வயதில் கதர்க்கடை ஒன்றை நடத்தி வந்தார். அதனை ஊர் ஊர்ராக எடுத்துச் சென்று விற்றார்.

Ø  இவர் தனது ஊரை விட்டு வாணிகத்திற்காக மதுரைக்குச் சென்றார். அங்கு சுவாமி சங்கரதாஸ் என்பவரிடம் யாப்பிலக்கணம் கற்றார்.

Ø  இவர் எழுதிய திரைப்பாடல்கள் ஓர்இரவு, வேலைக்காரி, பராசக்தி, மனோகரா, பிரபாவதி, ஆதிபராசக்தி, தேவதாஸ் போன்றவை.

Ø  இவர் கலைமாமணி பட்டமும் இராசராண் விருதும் பெற்றார்.

Ø  இவர் சீர்திருத்த கருத்துக்களை முதன்முதலில் திரைப்படத்தில் கொண்டு வந்தார்.

Ø  திருக்குறள் கருத்துக்களையும் மிகுதியாக பயன்படுத்தியுள்ளார்.

Ø  இவரது பாடல்கள் ஜனசக்தி என்ற பத்திரிக்கையில் வெளிவத்துள்ளது.

Ø  எனது வலதுகை என பாரதிதாசனால் புகழப்பட்டவர்.

Ø  இவருடைய பாடல்கள்

*      பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே – தூக்குத் தூக்கி

*      குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பது ஏது – இரத்தக் கண்ணீர்

*      போகாதே போகாதே என்கணவா பொல்லாத சொப்பனம் நானுங் கண்டேன் – மாயாஜோதி (கட்டபொம்மு கூத்து)   

*      பக்தி முக்கியம் அந்தகாலம் படிப்பு முக்கியம் இந்தகாலம்.  

மேற்கோள் :

v  தடை நடையே அவர் எழுத்தில் இல்லை………….

v  வேற்றுமையை வினைச் சொற்கள் ஏற்பதில்லை…………..  

No comments:

Post a Comment

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....