GROUP II & II A
தமிழ்
பகுதி – இ
தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்
புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி,
சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி
இளந்திரையன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய
நூல்கள்.
சாலை
இளந்திரையன்
இயற்பெயர் : மகாலிங்கம்
புனைபெயர்கள் : காஞ்சித் தலைவன்,
வீதியூர் நீதிக்கிழார், களக்காடு சா. பெரிய பெருமாள், பிள்ளைப்பாண்டியன்.
பிறந்த ஊர் : திருநெல்வேலி மாவட்டம் சாலைநயினார் பள்ளிவாசல்
பெற்றோர் : இராமையா, அன்னலட்சுமி
மனைவி பெயர் : சாலினி இளந்திரையன்
காலம் : 6/9/1930 – 4/10/1998
படைப்புகள் : காக்கைவிடு தூது,
இளந்திரையன் கவிதைகள், உலகம் ஒரு குடும்பம், திருந்திய திருமணம், தமிழின் ஒரே கவிஞன்,
சுடர் ஏந்திய தமிழ் மலர்கள், தமிழ் தமிழன் தமிழ்நாடு, நெருப்பிலே மலர்ந்த தமிழ் மொழிப்
பூக்கள், நெருப்பை வளர்க்கிறார்கள், ஒரு வணங்கா முடியின் கதை, சிலம்பின் சிறுநகை, பூத்தது
மானுடம், நடைகொண்ட படைவேழம், கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே, நஞ்சருக்குப் பஞ்சணையா?,
வீறுகள் ஆயிரம், அன்னை நீ ஆட வேண்டும், காலநதி தீரத்திலே, காவல் துப்பாக்கி, உள்ளது
உள்ளபடி, ஏழாயிரம் எரிமலைகள், தமிழ் தந்த பெண்கள், ஏன் இந்த மெத்தனம், கூட்டின் அமைதி
குலைகிறது, இரண்டு குரல்கள், வெற்றி மலர்கள், தமிழ்க் கனிகள், தமிழனே தலைமகன், நேயப்பாட்டு,
சமுதாய நோக்கு, புரட்சி முழக்கம், புதுத்தமிழ் முதல்வர்கள், புரட்சிக் கவிஞரின் கவிதை
வளம்.
குறிப்பு :
Ø இவர் தில்லி பல்கலைக்கழகத்தில்
தமிழ் ஆசிரியாராகப் பணியாற்றியுள்ளார்.
Ø இவர் 1971 ல் சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டுப் பழமொழிகளும்
சமுதாயமும் என்ற தலைப்பில் முனைவர் பட்டம்
பெற்றுள்ளார்.
Ø இவருக்கு திருப்புமுனை
சிந்தனையாளர், எழுச்சி சான்றோர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
Ø இவர் தமிழ்ப்பொழில், பிரசண்ட
விகடன் போன்ற இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார்.
Ø இவர் சங்க கால மன்னான
இளந்திரையனின் பெயரை புனைப்பெயராக வைத்துள்ளார்.
Ø இவர் உலகத் தமிழ்ப்
பண்பாட்டு இயக்கம், தில்லித் தமிழ் எழுத்தாளர் சங்கம், உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகம்,
இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் போன்ற கழகத்தைத் தோற்றுவித்துள்ளார்.
Ø இவர் தமிழ் எழுச்சி
மாநாடு, விழிப்புணர்ச்சி மாநாடு, எழுத்துச் சீர்திருந்த மாநாடு, அறிவியக்க மாநாடு போன்ற
மாநாடுகளை நடத்தியுள்ளார்.
Ø இவருடைய மானுடம் என்ற
கவிதைத் தொகுப்பில் கவிதைப் பூத்தது என்ற கவிதை புகழ் பெற்றுள்ளது.
Ø இவரது உரை வீச்சு,
புரட்சி முழக்கம் ஆகிய நூல்கள் தமிழக அரசின் பரிசுப் பெற்ற நூல்கள் ஆகும்.
Ø இவர் 1991 ல் பாவேந்தர் விருதினைப் பெற்றுள்ளார்.
Ø இவரை உலகப் பெருந்தமிழன்
என்றும் அழைத்தனர்.
மேற்கோள் :
v காசைப் பணத்தைப் பணியாதே………………………….
v எங்கும் புரட்சி எழுந்த பொழுது………………………….
v சேதாரம் இல்லாமல் நகை
செய்ய முடியாது………………………….
No comments:
Post a Comment