Tuesday

சாலினி இளந்திரையன்

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

சாலினி இளந்திரையன்

இயற்பெயர் : கனகசௌந்திரி 

பிறந்த ஊர் : விருதுநகர்

காலம் :  1933 – 2000

கணவர் : சாலை இளந்திரையன்

பெற்றோர் : சங்கரலிங்கம், சிவகாமியம்மாள்

படைப்புகள் : ஏந்திரக் கலப்பை, புதிய தடங்கல், பண்பாட்டின் சிக்கற்றங்கள், குடும்பத்தில் நான், ஆசிரியப் பணியில் நான், பண்பாட்டின் சிகரங்கள், படுகுழி, களத்திலே கடிதங்கள், சங்கத் தமிழரின் மனித நேய மணி நெறிகள்.     

குறிப்பு :

Ø  இவர் புதுடில்லி திருவேங்கடவன் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணிப்புரிந்துள்ளார்.

Ø  இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் சிலப்பதிக்காரச் சொல் வலம் என்ற தலைப்பில் ரா.பி.சேதுப்பிள்ளையின் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றார்.

Ø  இவர் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் ஆய்வுகள் நடத்தியுள்ளார்.   

Ø  இவர் கொண்டல், தெ.பொ.மீனாட்சிசுந்தரம், சு.மகாதேவன் போன்றவர்களிடம் தமிழ் கற்று கொண்டுள்ளார்.

Ø  இவர் சிறந்த சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், இதழாசிரியர், எழுத்தாளர்.

Ø  இவர் சிலம்பின் கதை மாந்தரான சாலினி என்ற பெயரை புனைப்பெயராக வைத்துக் கொண்டார்.

Ø  இவர் 1987 ல் மனித வீறு என்ற இதழை நடத்தியுள்ளார்.

Ø  இவரது முதல் கட்டுரை வாடா மலர் ஆகும்.

Ø  இவர் ஆனந்த போதினி என்ற இதழில் இலக்கிய கட்டுரைகள் எழுதியுள்ளார்.

Ø  சாலை இளந்திரையன் போன்ற பல அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளை தொகுத்து சாலை இளந்திரையன் நினைவு மலர் என்ற நூலை வெளியிட்டுள்ளார்.

Ø  சாலை இளந்திரையன் படைப்புகளிலிருந்து சாலையாரின் பிளிறல்கள் என்ற நூலை வெளியிட்டுள்ளார்.

Ø  சங்கத் தமிழரின் மனித நேய மணி நெறிகள் என்னும் தலைப்பில் இவரது சொற்பொழிவுகளை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார்.

Ø  இவர் வீரநடை அறிவியக்கம் என்ற இதழுக்கு இரண்டு ஆண்டுகள் ஆசிரியராக இருந்துள்ளார்.  

Ø  இவர் தந்தை பெரியாரை தனது வழிக்காட்டியாக கொண்டு வாழ்ந்துள்ளார்.

Ø  சாலை இளந்திரையனுடன் சேர்ந்து இரண்டு குரல்கள், தமிழ்க் கனிகள், தமிழனே தலைமகன், தமிழ் தந்த பெண்கள் என்ற நூல்களை எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....